சச்சேடி

தேதி: June 13, 2006

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்கறி கலவை (பரங்கி, கத்தரி, காராமணி, உருளை, கேரட், பூசணி) - 1/4 கிலோ
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1.5 டீஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 சிட்டிகை
கருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு


 

காய்கறிகளை சிறு துண்டுகளாக்குங்கள்.
காயவைத்த எண்ணெயில் இவற்றை பொரித்து எடுங்கள்.
சிறிது எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சற்று சிவந்ததும், பொரித்த காய்களை சேர்த்து, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, 1/2 கப் தண்ணீர் சேருங்கள்.
அது நன்கு கொதித்ததும், கடுகை நன்கு அரைத்து போடுங்கள்.
2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
சப்பாத்தி, பூரியுடன் சூப்பர் சைட் டிஷ் இந்த சச்சேடி


மேலும் சில குறிப்புகள்