குஸ்கா சமையல் குறிப்பு - 19717 | அறுசுவை


குஸ்கா

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : Sat, 30/07/2011 - 09:18
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 8 நபர்கள்

 

 • சீரகசம்பா அரிசி- 4 டம்ளர்
 • டால்டா- 1 ஸ்பூன்
 • தேங்காய் என்ணெய்-2 மேசை கரண்டி
 • நெய்- 3 ஸ்பூன்
 • பெரிய வெங்காயம்-4
 • வாசனை பொடி- 1/2 ஸ்பூன் (பட்டை,ஏலக்காய்,கிராம்பு)
 • புதினா- 1/2 கப்
 • கொத்தமல்லி-1/2 கப்
 • பச்சை மிளகாய்- 4
 • சின்ன வெங்காய விழுது- 1/4 கப்
 • தக்காளி- 8
 • மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
 • தயிர்- கால் கப்
 • இஞ்சி பூண்டு விழுது- 5 ஸ்பூன்
 • எலுமிச்சை பழம்- 2
 • கலர் பொடி- சிறிதளவு
 • உப்பு- தேவைக்கு

 

 • பாத்திரத்தில் மூன்று எண்ணெய்களையும் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 • அதில் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
 • பின்னர் வாசனை தூள், புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
 • பின்னர் சின்ன வெங்காய விழுது,தக்காளி, மிளகாய் தூள், தயிர், சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
 • பின் 1 டம்ளருக்கு 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
 • பின் அரிசியை சேர்த்து லேசாக தண்ணீர் இருக்கும் வரையில் தீயில் வைக்கவும்
 • நீர் வற்ற ஆரம்பிக்கும் தருவாயில் எலுமிச்சை சாறு ஊற்றி மீண்டும் எல்லா பக்கமும் படும் படி கிளறவும்.
 • பின் கலர்பொடியை நீரில் கரைத்து மேலாக ஊற்றி விட்டு கலக்காமல் அப்படியே மூடி தம்மில் போடவும்
தாளீச்சா, சிக்கன் அல்லது மட்டன் சாப்ஸ் உடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்


amina sis

unga recepie super...........chinna vengayam evlav number sekanunu sollunga pl............

ரம்யா சண்முகம்

மிக்க நன்றி சகோதரி

20 வெங்காயம் போடணும் .... செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

nandri sister

iniku unga recepie than seia poren.........senchtu epdi vanthathnu solren............reply pannathku thanx sister..................

ரம்யா சண்முகம்

:-)
மிக்க நன்றி ரம்யா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா மேடம்

ஆமினா மேடம்,

We like to make this recipe as it seems to be very tasty. எனக்கு இந்த குறிப்பில் சில கேள்விகள் உள்ளன.நேரம் கிடைக்கும்போது தெளிவுபடுத்தி தாருங்கள் plz.

1.சீரக சம்பா அரிசி(4 டம்ளர்), பெரிய வெங்காயம்(4), சின்னவெங்காயம்(1/4 கப்), தக்காளி(8),தயிர் (கால் கப்) போன்றவை தோராய கிராம் அளவில் தந்தால் எங்களுக்கு செய்யும் போது சுவைபட செய்வதற்கு உபயோகமாக இருக்கும்.

2.இங்கு லெமன் சாறு ரெடிமேட் பாட்டில்களில் கிடைக்கிறது,வாங்கி வைத்திருக்கிறோம்.இந்த குறிப்பிற்கு எத்தனை மேஜைகரண்டி சேர்க்கலாம்.

சனி அல்லது ஞாயிறில் இந்த recipe செய்துவிட்டு ,எப்படி இருந்தது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். we are looking forward for your reply very eagerly.நன்றி.

ராஜ்

ஹாய் ராஜ்

//1.சீரக சம்பா அரிசி(4 டம்ளர்), பெரிய வெங்காயம்(4), சின்னவெங்காயம்(1/4 கப்), தக்காளி(8),தயிர் (கால் கப்) போன்றவை தோராய கிராம் அளவில் தந்தால் எங்களுக்கு செய்யும் போது சுவைபட செய்வதற்கு உபயோகமாக இருக்கும்.//

இனி அடுத்தடுத்த குறிப்புகளில் கவனிகிறேன் ராஜ். இப்போதைக்கு சில அளவு மட்டும் சொல்றேன்.

அரிசி- ஒரு கிலோ
பெரிய வெங்காயம்-200 கிராம்
சின்னவெங்காயம்-100 கிராம்
தக்காளி-200 கிராம்
தயிர்-100 கிராம்

//இங்கு லெமன் சாறு ரெடிமேட் பாட்டில்களில் கிடைக்கிறது,வாங்கி வைத்திருக்கிறோம்.இந்த குறிப்பிற்கு எத்தனை மேஜைகரண்டி சேர்க்கலாம்.//

6 டீஸ்பூன் போடுங்க!

நன்றி ராஜ்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா மேடம்

ஆமினா மேடம்,

பதில் தந்ததற்கு மிகவும் நன்றி.இன்று உங்கள் குஸ்கா செய்தோம்.அருமையான சுவையுடன் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் விதத்தில் இருந்தது.என் cousin brother,friends அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.எங்கள் அனைவருக்கும் சூப்பர் லன்ச் இன்று. இனி அடிக்கடி செய்வோம்.

இந்த சுவையான குறிப்பை செய்து பார்க்க பதிலளித்து உதவியதற்கும்,குறிப்பிற்கும் மிகவும் நன்றி.