கர்ப்பிணி தோழிக்கு உதவுங்கள்:

ஹாய் தோழிகளே,
என்னுடைய தோழி ஒருத்தி வெளிநாட்டில் தனியாக வசிக்கிறாள்,அவள் இப்பொழுது 37 வாரம் கர்ப்பம்,அவளுக்கு 4 நாட்களாக Toilet போவதற்கு முன்னர் வயிறு வலிக்கிறதாம்,போய் வந்த பின்னர் சரி ஆகிவிடுகிறது, ஆனால் டாய்லெட் டைட்டாகவோ,லூஸ் ஆகவோ போகவில்லையாம்,1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை இப்பொழுது டாய்லெட் வருகிறதாம்,டாய்லெட் போவதற்கு முன்னர் மட்டும் தான் இந்த வலி உள்ளதாக கூறுகிறாள்,அவளுக்கு டாக்டர் அடுத்த வாரம் தான் அப்பாயிண்ட்மெண்ட் குடுத்து இருக்கிறாராம்,இது எதனால் ஏற்படுகிறது யாராவது கூற முடியுமா?

மேலும் அவளுக்கு எப்பொழுதாவது நடக்கும்போது திடீரென்று தொடை ஆரம்பிக்கும் பகுதியில் 1 நொடி சுரீர் என்று வலி ஏற்பட்டு சரி ஆகிவிடுகிறதாம்,இது எதற்கு என்று தெரியுமா?ஆனால் தினமும் அந்த வலி வருகிறதாம்.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு Labia Menora,Labia Majora பகுதிகள் நார்மலாக இருப்பதைவிட கர்ப்ப காலத்தில் வீக்கமாக அல்லது பெரிதாக இருக்குமா?
யாராவது வந்து பதில் அளியுங்கள் தோழிகளே

எனக்கு குழந்தை பிறப்பதற்க்கு முதல் நாள் தொடை ஆரம்பிக்கும் பகுதியில் 1 நொடி சுரீர் என்று வலி ஏற்பட்டது. வயிறு வலிக்கு சூடுகூட காரணமாக இருக்கலாம். ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் வலி சரி ஆகும். இல்லையேல் உடனே ஹாஸ்பிடல் போங்க.

KEEP SMILING ALWAYS :-)

hi nallam irukingala malli??.. coral draw free site kandupichittingala?therija ennakum konjam sollunga sister

hi

ithuvum kadanthu pogum

ஹாய் நாகா,
முதல் ஆளாக பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றிப்பா,ஆனால் அவளுக்கு 1 வாரமாக திடீர் திடீர் என்று தொடை ஆரம்பிக்கும் பகுதியில் வலி உள்ளதாகவும்,அந்த வலி 1 நிமிடம் தான் அப்பறம் வேறு எதுவும் வலி இல்லை என்றும் கூறினார்,உங்களுக்கு லேபர் வலி வருவதற்கு முன்பு,தொடை ஆரம்பிக்கும் பகுதியில் நீண்ட நேரம் எதுவும் வலி இருந்ததா?இது அவளுக்கு முதல் குழந்தை அவள் ஏற்கனவே பிரசவ அனுபவங்கள் படித்துவிட்டேன் என்று கூறினாள்,வேறு என்ன மாதிரி அறிகுறிகள் ஏற்பட்டது என்று நீங்கள் கூறினால் அவளுக்கு உதவியாக இருக்கும்,அவளுக்கு அம்மா இல்லை,அம்மா போல் அனைத்து தோழிகளும் வந்து உதவுங்கள் தோழிகளே,மேலும் Labia Menora,Labia Majora பகுதிகள் இந்த சமயத்தில் வீங்குமா? அதற்கும் பதில் கூறுங்கள் தோழிகளே

ஹாய் சத்யா,
எப்படி இருக்கீங்க?
நானும் நிறைய கோரல் சைட் பாத்தேன்,ஆனால் எதுவும் சரியாக கிடைக்கவில்லை,உங்களுக்கு கோரல் பிரீ சைட் கிடைத்தால் கூறுங்கள்

ஹாய் மல்லி எப்படி இருக்கீங்கள்?உங்க தோழிக்கு சுகப்பிரசவம் ஆக எனது வாழ்த்துக்கள்.இந்த லிங்கை பாருங்க உங்கலுக்கு உதவும் என்ரு நினைக்ரேன்.

வாழ்க வழமுடன்
துஷி தருன்

mahalir.blogspot.com/search/label

ஹாய் துஷி,
ரொம்ப நன்றிப்பா,உங்க பேர் ரொம்ப நல்லா இருக்கு,உங்க பதிலை கண்டிப்பா என் தோழி பார்த்து இருப்பாங்க,மற்ற தோழிகளும் வந்து உதவுவாங்கன்னு நினைக்கிறேன்

ஹாய் மல்லி, தொடை வலி 1 நொடி வந்தது உடனே ரத்தப்போக்கு இருந்தது. வலி வரவில்லை. வலிக்கு மருந்து கொடுத்தார்கள். பிரசவ வலியாக இருந்தால் தொடை வலியோடு காலும் வலிக்கும் கீழே கால் வைத்து நிற்க முடியாது.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் நாகா
ரொம்ப நன்றிப்பா,உங்க விரிவான பதிலுக்கு,எனக்காக நேரம் ஒதுக்கி வந்து பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி,என்னுடைய தோழி சார்பாக நன்றி தெரிவிச்சிக்கிறேன்

மல்லி உங்க friendku குழந்தை பிறந்ததும் சொல்லுங்க :)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்