கோழி கோலா உருண்டை

தேதி: August 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

கொத்திய கோழி - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5 அல்லது 6 எண்ணிக்கை
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துண்டு - 3
சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5 அல்லது 6 பல்
ஏலக்காய், கிராம்பு - தலா 5
பட்டை - சிறு துண்டு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். கோழியை கழுவி தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்கவும்.
கோழியை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைக்கவும். அரைக்க கொடுத்த சாமான்களையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழி, மசாலா, வெங்காயம், மிளகாய், உப்பு, மல்லி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு உருண்டையாக உருட்டி போடவும். (தீயை மிதமான சூட்டில் வைக்கவும். உருண்டை வேக 15 அல்லது 20 நிமிடம் ஆகும்)
உருண்டைகள் வெந்ததும் எடுத்து விடவும். இப்பொழுது சுவையான கோழி கோலா உருண்டை ரெடி

அடுப்பில் கடாயை வைத்துவிட்டு கோழியுடன் அரைத்த மசாலா, வெங்காயம், உப்பு எல்லாம் சேர்க்கவும் முன்பே பிசைந்து வைத்தால் தண்ணீர் விட்டு உருண்டை உடையும். வெங்காயத்தில் தண்ணீர் இருந்தால் வடிகட்டி பின் சேர்க்கவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் இந்த முறையில் செய்யனும்னு நினைத்து இருக்கேன், ஆனால் எப்படின்னு கொஞ்சம் குழப்பம் இருந்தது இப்போ தீர்ந்தது சூப்பர் பாத்திமா வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹமிட்பாஃத்திமா சலாம் கோளிஉருன்டை சாப்புட்ட ஞாபகம் எப்படி செய்ரது தெரியாது
அதனால்தான் ரெடிமேட் வாங்கி அடிக்கடி பொரித்துகொல்வேன்
நல்ல அருமையான குரிப்பு என்விருப்ப பட்டியலில் சேர்த்துவிட்டேன்

கூத்தானல்லூர் ரவா கேக் தெரிந்தால் ரிசிபி குடுங்க எல்லாருக்கும் உபயோகமா இருக்கும் பெருநாளைக்கும் செய்யலாம் சலாம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

விதவிதமா ஷேப்ல கோலா உருண்டை அசத்தலா இருக்கு. நோன்புக்கு என்னென்ன புது பலகாரங்கள் செய்வீங்க. எங்களுக்கு சொல்லி குடுங்க. நானும் விருப்பட்டியலில் சேர்த்துட்டேன். நேரம் கிடைக்கும்போது செய்துப்பார்த்து பதிவிடுகிறேன்மா.

பாத்திமா... ரொம்ப சூப்பரா செய்து காட்டி இருக்கீங்க... நல்ல ரெசிபி... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

பாத்திமா கோழிகோலா உருண்டை சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்தியாசமான குறிப்பு... பார்க்க நல்லா இருக்கு. பார்ட்டி ஸ்பெஷல்... மாலே போனதும் செய்துட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இதுவரையில் கோழியில் செய்தது கிடையாது கவுச்சி வாடை வரும் என்ற பயம் யாரும் செய்ய சொல்லிகொடுத்ததில்லை என்னவோஇதை செய்துபாக்கனும்னு தோனுது அவசியம் செய்துபாத்திட்டு தகவல் சொல்வேன்

உங்க கோழி கோலா உருண்டை பர்க்கவே யம்மிமி...... எனக்கு கோழினா ரொம்ப இஸ்டம்.... இந்த SUNDAY வீட்ல இதுதா.....

நீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........

பாத்திமா அம்மா,

நல்ல குறிப்பு..ட்ரை செய்துவிட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பர் உருண்டை.. சிக்கனாவே சுப்பர்..அதுல இப்படியா க்றிஸ்ப்பியா கொடுத்த என்ன ஆகறது .. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முதல் ஆளாய் வந்தது மகிழ்ச்சி குழப்பம் தீர்ந்ததா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வஸ்ஸலாம்...விருப்பபட்டியில் சேர்த்ததுக்கு நன்றி வருகைகும் நன்றி

கூத்தாநல்லூர் ரவா கேக் தெரியலை தெரிஞ்சதுனா சொல்றேன்

பழகாரங்கள் செய்யும் பொழூதுகண்டிப்பாசொல்கிறேன் விருப்ப பட்டியில் சேர்த்ததுக்கு நன்றி வருகைக்கு நன்றிடா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வனி இதுக்காக மாலே போகணுமா? செய்துட்டு சொல்லுங்கள் நன்றி

ராபி செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

செய்துட்டு சொல்லுங்கள் நன்றி

கவி செய்துட்டு சொல்லுங்கள் வாழ்த்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி

நேற்று உங்கள் கோழி கோலா உருண்டை செய்தேன். அரைக்கும் போது கொஞ்சம் கடலைபருப்பு சேர்த்து அரைத்து செய்தேன். நன்றாக இருந்தது. என் கணவரும், சிக்கன் சாப்பிடாத என் பையனும் கூட விரும்பி சாபிட்டார்கள். thanks for the recipe

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society