ஆப்பிள் அல்மண்ட் அல்வா

தேதி: August 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

ஆப்பிள் - 8
சர்க்கரை - 250 கிராம்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
வறுத்த பாதாம் பருப்பு - ஒரு கைப்பிடி
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி


 

அல்வா செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்து வைக்கவும்.
பாதாமை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.
ஆப்பிளை தோல் நீக்கி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை பொடித்து வைக்கவும்.
அதனுடன் ஒரு தேக்கரண்டி நெய் தடவி கலந்து மைக்ரோ ஹையில்(90%) 5 நிமிடம் வைக்கவும் .இடையில் ஓரிருமுறை கலந்து விடவும்.
பின் வெளியில் எடுத்து பார்த்தால் ஆப்பிள் ஓரளவு வெந்திருக்கும்.
அதனுடன் பொடி செய்த சர்க்கரைத் தூளை சேர்த்து கலந்து விடவும். மைக்ரோ மீடியமில்(50%) மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும். இடையில் கலந்து விடவும்.
நீர் வற்றியதும் அதனுடன் பாதாம் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து மேலும் மைக்ரோ மீடியமில்(40%) 5 நிமிடங்கள் வைக்கவும். இடையில் எடுத்து கலந்து விடவும்.
நன்கு கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் போட்டு சமப்படுத்தவும். இதில் மைக்ரோவேவ் வெப்பநிலை பொறுத்து, சமைக்கும் நேரம் சில நிமிடங்கள் மாறுபடலாம். இடையில் எடுத்து கிளறும் போது அதன் பக்குவம் பார்த்து நிமிடங்கள் கூட்டி அல்லது குறைத்து வைக்கவும்.

பர்பி போல் துண்டுகளாக விரும்பினால், சில நிமிடங்கள் கூட்டி கொள்ளவும். இனிப்பு அதிகம் விரும்புவர்கள் சர்க்கரையின் அளவை கூட்டிக் கொள்ளவும். செய்யும் அளவிற்கேற்ப (ஆப்பிளின் அளவு), நேரங்கள் மாறுபடும்..


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ம்ம்ம் நல்லா இருக்கு இளவரசி ஆப்பில் அல்வா கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.பசங்களுக்கு பிடிக்கும்,வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

இளவரசி மேடம் ஆப்பிள் பாதாம் அல்வா சூப்பர். புட்கலர் எதுவும் சேர்க்காம ஹெல்தியான ஸ்வீட்.

ஆப்பிள்,பாதாம் இரண்டு ஹெல்தியான விஷயம் அதுவும் ஸ்வீட்டா,வாவ் குழந்தைங்க கண்டிப்பா என்ஜாய் பண்ணுவாங்க(நானும்தான்)..கண்டிப்பா பண்ணிட்டு சொல்றேன்..

இதுவும் கடந்துப் போகும்.

சமயா இருக்கு... ஸ்வீட் ரெசிபி!!! அவசியம் செய்து பார்த்துட்டு வரேன் சீக்கிரமே. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி யம்மி யம்மி ஹல்வா. பார்க்கவே சாப்பிடனும் போல இருக்குப்பா. அவன் இல்லை ஆனா செய்யனும்னு ஆசையா இருக்கு பார்க்கறேன் எப்படி முயற்சித்துடுறேன்.

சுவையான ஆப்பிள் அல்வா பார்க்கவே சாப்பிடதூண்டுது இளா...வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

wow! its looking beautiful n yummy.we dont have anyway i'll try.thanks for healthy tips for children.

இளவரசி பார்க்கவே சூப்பரா இருக்கு ஹெல்தியான அல்வா:)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஹாய் பிரின்சஸ்,மறுபடியும் ஒரு அட்டகாசமான ஸ்வீட்டோட வந்திருக்கீங்க.

ஆப்பிள்,பாதாம் சூப்பரா ஜோடி சேர்த்திருக்கீங்க,அல்வாவை பார்க்கும்

போதே மனசு மயங்குது,சாப்பிடத் தூண்டுதுடா,கலக்கறீங்க வாழ்த்துக்கள்டா.

மயக்கும் படங்களும்,இனிக்கும் அல்வாவும் அற்புதம் பிரின்சஸ்.அருமையான

குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகளும்,பாராட்டுக்களும் பிரின்சஸ்.

அன்புடன்
நித்திலா

இளவரசி,
ஆப்பிள் அல்மண்ட் அல்வா இதுவரை கேள்விப்படாத ரெசிப்பி.அழகா செய்து காட்டி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

இளவரசி,

ஸ்வீட் ட்ரீட்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பழத்திலிருந்து அல்வான உடனையே நீங்க தான் நினைத்தேன்.. சூப்பர் குறிப்பு.. ஆனா ஒன்னு மிஸ்ஸிங்.தலைவர் இல்லையே ;) என்ன சொன்னார்.. யம்மியா ? ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இளா, கலக்கிட்டீங்க. அவன் இல்லை. அப்படியே அடுப்பில் எப்படி’னு சொல்லிருந்தா ஈஸியா இருந்திருக்கும். நானே ட்ரை பண்ணிட்டு சொல்றேன். எப்போ’னு தெரியலை. எனக்கு காய்களை துருவுவது ரொம்பவே கஷ்டம். ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுட்டு ஆப்பிளை வேகவைத்து மிக்ஸியில் அடிச்சு பண்ணிடறேன்:)

அன்புடன்
பவித்ரா

இளவரசி, ஆப்பிள் அல்வா சிம்ப்ளி சூப்பர்ர்ர். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சத்தான சுவையான நிமிடத்தில் செய்யக் கூடிய குறிப்பு. வாழ்த்துக்கள் பா. என்னப்பா, ஸ்வீட் ரெசிப்பில ஒண்ணு குறையுதே. பக்கத்துல இளவரசர் இல்லையே சாப்பிட ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குமாரி,
செய்து பாருங்க ..பிள்ளைகளுக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும்.
வினோஜா,
முடிஞ்சவரை நான் ஃபுட் கலர் சேர்க்கறதில்லங்க..ஹெல்திதான் ட்ரை பண்ணுங்க..
அஸ்வினி,
ட்ரை பண்ணினா அப்புறம் விடமாட்டீங்க…
வனி,
செஞ்சு பாருங்க வனி…
யாழினி அடுப்பிலேயே தாராளமா செய்யலாம்.கிளறும் சிரமம் குறைக்கத்தான் அல்வாவுக்கு எப்பவும் அவன் யூஸ் பண்ணுவேன்..மற்றபடி ஒன்றுமில்லை
ஸ்வர்ணா,
அப்ப செஞ்சு பார்ப்பீங்கதானே
சித்ரா,
ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க
ஷெரின்பானு,செஞ்சு சாப்பிட்டாலும் நல்லாதான் இருக்கும்
நித்திலா
உங்க பின்னூட்டம் படிச்சு,அல்வா சாப்பிடறமாதிரி இருக்கு 
ஹர்ஷா
பிடிச்சுருக்கா…அப்ப ட்ரை பண்னுங்க

கவிதா

கவிதா
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

ரம்யா,
பார்த்தவுடனே கண்டுக்கிட்டீங்களா  ஆமா இதுமாதிரி செஞ்சு கொடுத்தா
ஓரேடியா ஐஸ்வைப்பான் …..:)

பவி
அடுப்பிலேயே செய்யுங்க நல்லா வரும்….வந்துதான்னும் சொல்லுங்க

கல்ப்ஸ்,
போட்டோ அனுப்பினேன் பட் ஏன் வரலன்னு தெரியல

பின்னூட்டம் அனுப்பிய எல்லா தோழிகளுக்கும் ,இதை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கும் என் தாமதமான அன்பு நன்றி 

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.