Tamil Song Guitar Book ,Help please

எனக்கு தமிழ் சினிமா பாட்டு learn-பன்ன Guitar புத்தகம் வேண்டும்.எங்கு கிடைக்கும், யாரவது சோல்லுஙளேன்

தமிழ் சினிமா பாடல்கள் கூகுளில் தேடுங்கள். வேறு வலை தளங்களின் முகவரிகளை நம் வலை தளத்தில் தர வேண்டாம் என்று அட்மின் சார் அவர்களின் அறிவிப்புக்கிணங்க வலைதள முகவரிகள் நீக்கம் செய்யப் பட்டுள்ளன.

அன்புடன்
THAVAM

shema ,
கிடார் வாசிக்க புத்தகம் கேக்குறீங்களா? அல்லது chord நோட்ஸ் வேணுமா?
கிடார் வாசிக்க புத்தகம்:
guitar for dummies
complete book of guitar -Melbay
இதை தான் கிடார் கிளாஸ்க்கு வாங்க சொன்னாங்க..என்னால் போக முடியவில்லை ..உங்களுக்கு உதவும்னு நினைக்கிறன்
சென்னையில் ஹிக்கின்போத்தம்ஸ் அல்லது லேண்ட்மார்க்கில் கிடைக்கும் அதிர்ஷ்டம் இருந்தால் மூர் மார்க்கெட்டில் கிடைக்கும்
ஆன்லைனில் EBAY ,AMAZON போன்ற தளங்களில் கிடைக்கும்
தமிழ் வரிகளுக்கு தவமணி சார் சொல்லி இருக்கார் பாருங்க..
இது மட்டும் அல்லாமல் நிறைய தளங்கள் இலவசமாக கற்று தருது..கூகிள் செய்யுங்க..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கிடாரில் தமிழ் பாடல்கள் வாசிக்க என்று புத்தகம் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. தமிழில் "கிடார் கற்றுக் கொள்ளுங்கள்" என்று புத்தகம் இருக்கின்றது (என்னிடமும் இருந்தது.) அதில் அடிப்படை நோட்ஸ் விசயங்கள், கார்ட்ஸ் பிடிப்பது, லீட் ப்ளே செய்வது எப்படி என்பது மாதிரியான விசயங்கள் இருக்கும். சில பாடல்களுக்கான நோட்ஸ் இருக்கும். தமிழ் பாடல்களுக்கு நோட்ஸ் இருந்ததாக நினைவு இல்லை.

புத்தகங்கள் பார்த்து தமிழ் பாடல்கள் வாசிக்க விரும்புகின்றீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்கனவே நோட்ஸ் குறித்த நாலேட்ஜ் இருக்கின்றது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. அடிப்படை விசயங்கள் கற்றுக் கொள்ள, ஆங்கில பாடல்கள் இசைக்க என்னிடம் சில கிடார் புத்தகங்கள் (இ-புக்ஸ்) உள்ளன. தேவைப்பட்டால் சொல்லுங்கள்.. அனுப்பி வைக்கின்றேன். கிடார் கற்றுக் கொள்ள வீடியோ ட்ரெயினிங் சிடி க்கள் என்னிடம் நிறைய உள்ளது. ஆனால், அதை எல்லாம் அனுப்ப மாட்டேன் :-) அனுப்புவது சிரமம். (எங்கள் வீட்டிற்கு வந்தால் ஒரு காப்பி போட்டு எடுத்துச் செல்லலாம். :-))

ரெம்ப நன்றி பதில் அளித்த அனைவருக்கும்.

தமிழில் "கிடார் கற்றுக் கொள்ளுங்கள்" என்று புத்தகம் எங்கு

கிடைக்கும்,சோல்லுஙளேன்

மேலும் சில பதிவுகள்