தக்காளி ஊறுகாய்

தேதி: August 2, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

பெங்களூர் தக்காளி.......1/2கிலோ

பட்டைவத்தல்................30 எண்ணிக்கை

நல்லெண்ணெய்................150கிராம்

நாட்டுப்பூண்டு.............100கிராம்

வறுத்து பொடித்த வெந்தயபொடி.......1/2தேக்கரண்டி

பெருங்காயத்தூள்.............2தேக்கரண்டி

உப்பு.........தேவைக்கு

கறிவேப்பிலை...............4ஆர்க்கு

கடுகு..............1தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு.........1தேக்கரண்டி


 

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும் பூண்டை தோல் எடுத்து வைக்கவும்

அடுப்பில் கடாயைவைத்து தக்காளியை போட்டு நன்றாக வேக வைக்கவும்

தண்ணீர் வற்றி நன்கு சுருண்டு வரவும் அடுப்பை அனைத்து ஆற விடவும்

ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் பட்டைவத்தல் சேர்த்து நன்றாக மசிய அறைக்கவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

வதக்கியதில் அறைத்த தக்காளி விழுது உப்பு, வெந்தயப்பொடி,பெருங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும் அடி பிடிக்காமல் கிளறவும் (நன்றாக சுருண்டு அல்வா பதத்துக்குவ்ரும்வரை வைத்திருந்து)

எண்ணெய் பிரிந்து மேல வரவும் அடுப்பை அனைத்து இறக்கி விடவும்

சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி


தக்காளி நல்ல பழமாக சிவப்பாக இருக்கனும் அப்போதான் கலர் கிடைக்கும்
தக்காளி வேகும் போது வாயில் வைத்து பார்த்தால் இனிப்பாக இருந்தால் சிறிது புளி சேர்த்து வேகவிடனும் ஆறியதும் டப்பாவில் வைத்து கொள்ளவும்
ஃப்ரிட்ஜ்ஜில் 15&20பது நாள்வரை வைக்கலாம் வெளியில் வைத்தால் நான்கு நாட்கள்வரை வைக்கலாம் இட்லி தோசை சப்பாத்தி சாதம் எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன்

மேலும் சில குறிப்புகள்