கோழி குழம்பு

தேதி: August 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி- 1 கிலோ
பட்டை-1
ஏலக்காய்-3
லவங்கம்-2
பச்சை மிளகாய்-2
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
தேங்காய்- கால் மூடி
கறிமசாலா தூள்- 6 ஸ்பூன்


 

தேங்காயை நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து அரைத்து(தேங்காயுன் தூள் நன்கு ஒட்டுவதற்காக) பின் நீரில் கரைத்துக்கொள்ளவும்

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்

பின் பச்சை மிளகாய்,புதினா,கொத்தமல்லி சேர்த்து சுருள விடவும்

வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்

மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்கு உப்பும் சேர்க்கவும்

நன்கு கொதி வந்த பிறகு கோழியை சேர்க்கவும்.

வெந்ததும் பரிமாறலாம்.


சாதம், குஸ்கா வகைகள், புரோட்டா, பூரிக்கு அருமையான காம்பினேஷன்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஆமினா இந்த குழம்பு கொஞ்சம் கெட்டியா வைச்சாதானே நல்லா இருக்கும்.பதில் ப்ளீஸ். s.subbulakshmi

ஹாய் சுப்பு
கொஞ்சம் கெட்டியா வைக்கலாம்... ரொம்ப கெட்டியாலும் நல்லா இருக்கும் (இட்லி தோசைக்கு).அதுவும் சுண்ட சுண்ட வச்சா மட்டும்...... :)

சாம்பார் பதத்திற்கு செஞ்சு பாருங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Snacks pirivil ethavathu variety irunthal sollavum...