i am 8th month Pregnant

இது எனக்கு 30 வாரம், என் முகம் மற்றும் முதுகில் சிறு கொப்பளங்கள் வருகிறது.இதற்கு காரணம் மற்றும் தீர்வு கூறுங்கள்.

எனதன்பு நண்பி !!! மஞ்சள்கிழங்கு சந்தானம் அரைத்து போட்டு பாருங்கள் .சரியாகவில்லைஎனில் நீங்கள் தோல் வைத்தியரை பார்ப்பது நல்லதென்று நினைக்கிறேன்.எனக்கும் எட்டாவது மாதம் தான்...சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறேன்....

எனக்கு இது 29 வது வாரம் ,முகம் முழுக்க சிறிது சிறிதாக பொறி பொறியாக உள்ளது ,முகம் அதனால் அசிங்கமாக உள்ளது ,இது எதனால் இருக்கும் ?.உடலிலும் அப்படி சில இடங்களில் உள்ளது ,நான் முகத்தில் தினமும் குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் தடவி ஊற வைத்து குளிக்கிறேன் ,அப்போதும் குறையவில்லை ,சத்து குறைபாடாக இருக்குமா ?என்று தெரியவில்லை ,இது எதனால் ?இப்போது அப்படி வருமா ?இதற்க்கு தீர்வு என்ன செய்யலாம் தோழிஸ் சொல்லுங்கள்.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்