சில்லி ப்ரெட்

தேதி: June 14, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 10
வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - அரை கப்
எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

ப்ரெட் ஸ்லைஸை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் வாணலியில் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி போட்டு வதக்கவும். பின் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.
பின் வறுத்த ப்ரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும். பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்