வாழைக்காய் பொடிமாஸ்

தேதி: August 3, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

 

வாழைக்காய் - 3
தேங்காய் துருவல் - கால் கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறுத் துண்டு
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 5
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

முதலில் வாழைக்காயை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதமாக வேக வைக்கவும்.
வாழைக்காய் வெந்ததும் தோலை உரித்து விட்டு கேரட் துருவியில் துருவவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வரமிளகாயை கிள்ளி போட்டு கடுகு, உளுந்து தாளிக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் தேங்காய்துருவல் சேர்த்து வதக்கவும்.
துருவிய வாழைக்காய், சோம்புதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான பொடிமாஸ். வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல குறிப்பு செய்துட்டு வரேன் :-)

KEEP SMILING ALWAYS :-)

சூப்பரா இருக்கு இந்த வாரம் செய்து பார்கிறேன் by Elaya.G

அம்மா கைமணத்தில் மிகவும் பிடித்த டிஷ். அம்மா வெங்காயம் சேர்க்க மாட்டாங்க. வாழைக்காய் ரெண்டாக கீரி வேகவைத்தால் சீக்கிரம் வெந்திடும்’னு அப்படி செய்வாங்க. மத்தபடி அதே முறை தான். எனக்கு பிடித்த டிஷ் செய்ததற்கு இந்தாங்க ஆப்பிள் அல்வா:)

அன்புடன்
பவித்ரா

வாழைக்காய் நேத்து தான் வாங்கினேன்.. இப்பவே மதியத்துக்கு செய்து பாத்துட்டு பதிவு போடறேன் இருங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வர்ணா,
வாழைக்காய் இந்த முறையில் செய்ததில்லை.கண்டிப்பா செய்துபார்க்கிறேன்.வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.

super recipe.i will try your recipe. keep it up. regards g.gomathi.

valaikai podimas super.pakave sapdanum polarku....................

ஹாய் ஸ்வர், பார்தயுடனே நெனச்சேன் இது ஸ்வர் குறிப்பாதான் இருக்கனும்னு அதே போல் நீங்கதான் :) வாழைக்காய் பொடிமாஸ் சூப்பர்.. வாழ்த்துக்கள் ஸ்வர்;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்வர்ணா, கலக்குறீங்க. ஈசியான் ரெசிபி, கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

சோம்பு சேர்த்து செய்ததில்லை நானும் இப்படித்தான் செய்வேன் வாழ்த்துக்கள்

சுவா, வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை வித்தியாசமாக இருக்குது சுவா. இந்த முறையில் செய்தா டேஸ்டா இருக்கும் போல. ஊருக்கு வந்ததும் உங்க கையால செய்ததையே சாப்ட்டு பார்த்துடறேன் ;)) அம்மா, வாழைக்காயை முன்னாடி வேக வைக்க மாட்டாங்க பா. பொடி பொடியா அரிஞ்சு போட்டு, வெங்காயத்தோடயே சேர்த்து கடாயில் வதக்கி செய்வாங்க. அதில தேங்காய் சேர்ப்பாங்க. காரகுழம்புக்கு சரியான காம்பினேஷன். நல்ல குறிப்பு தந்தீங்க சுவா. இங்கே இது போல வாழைக்காயை பார்ப்பதே அரிது. உங்க மூலமா படத்துலயாவது பார்த்து ஆசைய தீர்த்துக்கலாம். வாழ்த்துக்கள் சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவினற்க்கு நன்றி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி நாகா செய்துட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பவி மிக்க நன்றிப்பா.ஆப்பிள் அல்வா சூப்பர் :-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு மிக்க நன்றி செய்துட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழைக்காய் பொடிமாஸ் சூப்பர்...நானும் இப்படிதான் செய்வேன்,ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டு,உங்க பொடிமாஸை அப்படியே கொஞ்சம் பார்சல் அனுப்புங்கப்பா..எங்க ஆளையே காணும்..gtalkல வரகூடாதுன்னு ஏதாவது வேண்டுதலா?

இதுவும் கடந்துப் போகும்.

நன்றி கோமதி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி ரம்யா செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி தேவி...:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.இங்க வாங்க செய்து தரேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா :) பார்சல்தானே அனுப்பிட்டா போகுது:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் மிக்க நன்றிப்பா செய்து பாத்துட்டீங்களா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா பாக்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ஸ்வர்,வழக்கம் போலவே அசத்தலான குறிப்பு ஸ்வர்.

வாழைக்காய் பொடிமாஸ் சூப்பராயிருக்கு ஸ்வர்,அழகு மிளிரும்

படங்களும்,சுவையான குறிப்பும்,அருமை ஸ்வர்.பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்

தங்கப் பெண்ணே.

அன்புடன்
நித்திலா

குமாரி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றிப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

tasty dish :)

KEEP SMILING ALWAYS :-)

ஸ்வர்ணா

வழக்கம் போல் அசத்தல் குறிப்பு. வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

Today i try your recipe it came out very well. thank you very much to give very tasty recipe.regards.g.gomathi.

நன்றி நாகா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி மஞ்சு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி கோமதி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர்ணா,
நேற்று இந்த பொடிமாஸ் ட்ரை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமாக இருந்தது :)

மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)