முருங்கைக்காய் ஊறுகாய்

தேதி: August 4, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இளம் முருங்கை - 10
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
வெந்தயம் - 3 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 100 மில்லி
பெருங்காயம் - 2 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்


 

முருங்கைக்காய்களை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முருங்கைகாயுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் வடிகட்டி எடுத்து காய வைக்கவும்.
சிறிதளவு எண்ணெயில் வெந்தயம், பெருங்காயம் தாளித்து எடுத்து கொள்ளவும்.

முருங்கைக்காய், நல்லெண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூளுடன் தாளித்தவற்றை சேர்த்து காற்று போகாத பாத்திரத்தில் மூடி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்