கத்தரிக்காய் புளி கொத்சு - 2

தேதி: August 5, 2011

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பெரிய கத்தரிக்காய் - 1
புளித்தண்ணீர் - 1/4 கப்
வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
வரமிளகாய் - 1
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து, பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

கத்தரிக்காயை சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு தோலுறித்து வைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, துவரம் பருப்பு, வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து உப்பு சேர்த்து புளி வாசனைபோக கொதிக்க வைக்கவும்.
புளி நீர் ஆறியவுடன் தோலுரித்த கத்தரிக்காயை நன்கு பிசைந்து சேர்க்கவும்.
இறுதியாக தேங்காய் துருவலை வறுத்து சேர்க்கவும்.


தோசை, இட்லியுடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்