நோன்புகஞ்சி(கறி)

தேதி: August 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

குக்கரில் வேக வைக்க

கொத்துகறி............100கிராம்

பச்சரிசி நொய்..........1/2டம்ளர்

பாசிப்பருப்பு..............1/4டம்ளர்

சின்னவெங்காயம்..........10

பூண்டு...............10

இஞ்சி,பூண்டு பேஸ்ட்...........21/2தேக்கரண்டி

சோம்பு...........2தேக்கரண்டி

வெந்தயம்............1/4தேக்கரண்டி

பட்டைகிராம்பு ஏலக்காய்த்தூள்..............1/2டீஸ்பூன்

மல்லி இலை,புதினா,............ஒரு கையளவு

தக்காளி............1

பச்சைமிளகாய்.......2

உப்பு ..............தேவைக்கு

தாளிக்க

கடுகு............2தேக்கரண்டி

உளுந்து.............1தேக்கரண்டி

கறிவேப்பிலை...........சிறிது

பட்டைவத்தல்............2

எண்ணெய்...............2தேக்கரண்டி

அரைக்க

தேங்காய் 2துண்டு


 

வேகவைக்க குடுத்தவைகளை குக்கரில் 7&8 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒருவில்விட்டு சிம்மில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

தேங்காயை மிக்ஸியில் முக்கால் அரப்பாக அரைத்து வேகவைத்ததில் சேர்க்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளைப்போட்டு தாளித்து கொட்டவும்


கஞ்சி கட்டியாக இருந்தால் சுடு தண்ணீர் தேவைக்கு சேர்க்கவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

மறூபடியும் நான் உங்கள மாதிரி தான் செய்வேன்னு காமிச்சுட்டீங்கோ :)) கிட்டதட்ட நானும் இப்படி தான் செய்வேன். :)) ஆனா இந்த முறை இன்னும் கூடுதல் சுவையா இருக்கும்னு நெனைக்கிறேன் . செய்து பார்க்கிறேன் பாத்திமாம்மா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Super

ஒரு நோன்பு கஞ்சி செய்வதற்க்கு இத்தனை பொருள் ஏண் ? நீங்க வீட்டில் இருப்பவர்கள் செய்துவிடலாம் நாங்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி இதெல்லாம் தயார்செய்யமுடியும் ? நாங்கள் அரிசி கள்ளபருப்பு வெந்தயம் பூண்டு தக்காளி மிளகாய் இவை யெல்லாம் போட்டு கேரட் சிறு துண்டுகள் சேர்த்து வேகவிடு குடிக்கிறோம் இறக்கும் பொது தேங்காய் பால் பொடி இருந்தால் கொஞ்சம் கரைத்து ஊற்றி இறக்குகிறோம் அதுவும் எங்களுக்கு பிரமாதமாகத்தான் இருக்கிறது . .நீங்கள் சொன்ன கடுகு கத்தரிக்காய் அது இது யெல்லாம் எங்களிடம் கிடயாது . அதனால் எங்களுக்கு ஏற்ற குறிப்புகள் இருந்தால் தரவும் வஸ்ஸலாம் ஆமீன்