விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

ரேணு கிழங்கு வகைகள். பதில்

பஷரியா உங்கள் விடையும் சரியல்ல.......இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.......பதில் சொன்னவுடன் இதுதானான்னு நினைப்பீங்க.........

மல்லி இதுவும் சரியல்லப்பா.........

மத்தாப்பூ சிரிப்பூ

அட பஷரியா அதற்குள் பதில் கொடுத்துட்டீங்க......சரி என் விடுகதைக்கு விடை சொல்லுங்க......

ரேணு வேர்கடலை சரிதானே??
எங்க அக்கா பையனுக்கு சொல்லி குடுத்த நியாபகம்,சரியான்னு தெரியல :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இதுக்குதான் சுகிவேணுங்கறது.........இந்தா இன்னொரு டம்ளர் காங்கோ ஜூஸ்.........உன் பதில் மிகச்சரி.......
அடுத்த விடுகதை...!?

3.காற்றுப் புகாத வெள்ளைக்கூண்டில் மஞ்சள்புறா மயங்கிக் கிடக்குது. அது என்ன?
அடுத்த விடுகதை பதில் கொடுங்க பார்க்கலாம்........

ரேணு இப்போது ஜீஸ் எனக்கு தான். முட்டை. சரியா?

முட்டை சரியா ஆமா என் விடுகதை என்னாச்சு அப்பன் சொரியன் அம்மா சடச்சி பிள்ளை சக்கரக்கட்டி

ரபி, பதில் நீங்களே, சொல்லீட்டிங்கலே, மத்தாப்பூ சிரிப்புன்னு

மேலும் சில பதிவுகள்