விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

பசாரியா உங்க பதிலும் தப்பு.
க்ளு வேணுமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகி வந்துட்டேன்......
பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால் கருப்பு ராஜா - அது என்ன?
"சீதாப்பழம்"சரியா?
போனதுக்கும் சரியான்னு சொல்லலை......

காதோடு தான் நான் பேசுவேன்;
உதடோடு தான் உறவாடுவேன்; நான் யார்?
விடை - "ஹெட் போன் & மைக்"

அடுத்த விடுகதை,

5. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

சீதாப்பழம் - சரி தான் ரேணு..
போன முறை சொன்னதும் சரியே :-)

இம்முறை ஈஸி ஹ கேட்டுடீங்க - பதில் கண்

***********************
கால் இல்லை, ஓட்டம் உண்டு,
மூச்சு இல்லை, காற்று உண்டு. - அது என்ன?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரேணு. கண். ( நான் ஹெட் போன் சொன்னென் ரேணு)

train , tree, kite ஆறு

கால் இல்லை, ஓட்டம் உண்டு,
மூச்சு இல்லை, காற்று உண்டு. - அது என்ன?
"பந்து" சரியா?

மல்லி பாதி சரி அதனால் பாதி ஜூஸ் குடிங்க.......

விடுகதை

6. உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?

நான் ரொம்ப அறிவாளீயா இருகுரதால போதும் என் மானம் போரதுக்கு முன்னாடி விலகிகிரேன்

ரேணு. பட்டு பூச்சி கூடு

இது எல்லாம் சும்மா லோலாய், இதுனால என்ன இருக்கு. நீங்களும் கேளுங்க. நாங்க பதில் சொல்ல ட்ரை பண்றோம்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்