விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

மல்லி அந்த விடை சரியல்ல....இன்னும் முயற்சி செய்யுங்கள்......

ரேணு. தேன் கூடு

சரி பதிலை நானே சொல்லிடறேன்.....

உழவன் விதைக்காத விதை
கொத்தன் கட்டாத கட்டிடம்
வண்ணான் வெளுக்காத வெள்ளை
சிற்பி செதுக்காத சிலை- அது என்ன?

விடை - "பல்".......
அடுத்து போடலாமா? இல்லை நாளை தொடரலாமா?

kandu kaikaikum kanamal poopuikkum athu wayrkadali pa

wayitrillai paikku suinnampu, puyalai

palapalam

thyaingkai

En Kuthirai (horse) karuppu kuthirai
kulippattinal, vellai kuthira...
Nan yaar???????????

விடை: உளுந்து........ சுஹாஷினி. தமிழில் டைப்செய்யவும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

"உளுந்து" சரியான விடை என்றுதான் நினைக்கின்றேன். இந்த விடுகதைகளுக்கு விடைகாண முடியுதா என்று பாருங்கள்.

1.ஆசைக்கு அவளெக் கட்டி,
அழகுக்கு மகளெக் கட்டி ,
கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி
சேர்ந்து வாழ நங்கையாளக் கட்டி
நாலு பேருஞ் சேர்ந்து நாசமாப் போயிட்டாங்க
அவங்கல்லாம் யாருன்னு சொல்லுங்க....

அடுத்து..

2.முத்து சிலம்புக்காரி
மும்பணத்து ஓலைக்காரி
தண்டைச் சலங்கைக்காரி
தரணியில் திரியும் நாரி,
மின்னல் நடைகாரி
மின்சாரப் பைக்காரி
அவளைத் தொடுவானேன்
அவஸ்தைப் படுவானேன் - அது யார்?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்