விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

1.ஆசைக்கு அவளெக் கட்டி,
அழகுக்கு மகளெக் கட்டி ,
கூடிவாழக் கொழுந்தியாளக் கட்டி
சேர்ந்து வாழ நங்கையாளக் கட்டி
நாலு பேருஞ் சேர்ந்து நாசமாப் போயிட்டாங்க
அவங்கல்லாம் யாருன்னு சொல்லுங்க....

"வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
புகையிலை"

"வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
புகையிலை"

ரேணுகா உங்கள் விடை சரியானதா வாழ்த்துக்கள்.

இரண்டாவது கேள்விக்கு எவரும் சரியான பதில் தராத படியால் நானே சொல்லி விடுகின்றேன்.

"2.முத்து சிலம்புக்காரி
மும்பணத்து ஓலைக்காரி
தண்டைச் சலங்கைக்காரி
தரணியில் திரியும் நாரி,
மின்னல் நடைகாரி
மின்சாரப் பைக்காரி
அவளைத் தொடுவானேன்
அவஸ்தைப் படுவானேன் - அது யார்?"

விடை

தேள்.

அடுத்த விடுகதை இதோ:

1.காக்கையைப் போல் கருமை நிறம்
கையால் விண்டால் ஊதா நிறம்
வாயால் மென்றால் நீல நிறம்
பாம்பின் பெயரே அதற்கு உண்டு - அது என்ன

2.முள்ளு முள்ளுக்குள்ளே
முந்திரித் தோப்புக்குள்ளே
வைக்கோல் போருக்குள்ளே
கண்டெடுத்தேன் வைரமணி - அது என்ன?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Pls guide me how to type in tamil... there is no tamil font..

1. Naaval pazham (Nagaapazham)

Hi

ஒரு தந்தை & மகன் - வயதை கூட்டினால், அவர்களின் வயது 66... தந்தையின் வயதை திருப்பி போட்டால் மகனின் வயது வரும்... இதற்கு 3 விடைகள் உள்ளது ...

களிஃபோர்னியாவில் ஒருவன் தனது விதவையின் தங்கையை மறுமணம் செய்ய அந்த நட்டின் அரசு ஒத்துக்கொள்ளுமா?????

ஹாய் Friends ,

எல்லாரும் நலமா ? ஏன் விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம். சொல்பவர்களுக்கு ஒரு ஆச்சர்யமூட்டும் பரிசு சரியா ?

1. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

2. குடிக்க உதவாது, குளத்தில் தங்காது,
கைகளால் தொடாத நீர், கண்களுக்கு
மட்டுமே விருந்தாகும்-
அது என்ன?

3. குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து
கொண்டே போகும் அது என்ன?

4. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

5. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

6. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

7. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

8. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

9. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

10. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?

Jenny Countdown Starts 1, 2, 3 ....

ஜென்னிவினோ

Dare To Paly With Life

1.தேன்கூடு
2.கானல் நீர்
3.
4.தீக்குச்சி
5.அஞ்சல்(post)
6.வானத்தில் உள்ள மேகம்
7.
8.வெங்காயம்
9. செல்போன்
10.இளநீர் தென்னைமரம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

யோகராணி

1. காக்கை போல் - விடை - நாகப்பழம்
2. முள்ளு முள்ளு - விடை - பலாப்பழம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

3. தீக்குச்சி
7. சாமரம்
9. கம்மல் (தோடு) is that right

மேலும் சில பதிவுகள்