விடுகதைக்கு விளக்கம் தா....- பாகம் 2

விடுகதைக்கு விளக்கம் தா... பகுதி - 1, 200 பதிவுகள் தாண்டிவிட்டது. ஆகையால் தோழிகள் அனைவரும் தங்கள் விடுகதையையும் அதற்கான விடைகளையும் இங்கு கொடுக்கலாம்....

செத்துப்போனவன் கல்யாணம் பண்ணிக்கறத பத்தி இன்னும் எந்த நாடும் சட்டம் கொண்டு வரலைன்னு நினைக்கிறேன்..என்ன சொல்றீங்க?

இதுவும் கடந்துப் போகும்.

ஹாய் தோழீஸ்,

ம் ம் மிகச்சரியான விடை தந்துடீன்களே சபாஷ். என்ன பரிசு வேண்டும் ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

சரி sister

விடுகதைக்கு இன்னொரு விடுகதையே பரிசாக கொடுங்க

ஒரு ராஜா கருப்பு குதிரையையும் வெள்ளை குதிரையையும் கூட்டிகிட்டு ஆத்துக்கு குளிப்பாட்ட போனாறாம். திரும்பி வரும்போது வெள்ளை குதிரையோட மட்டும் வந்தாராம். அது என்ன?

உளுந்து - வெள்ள குதிரை
உளுந்து தோல் - கருப்பு குதிரை

KEEP SMILING ALWAYS :-)

ஹாய்,

நன்றி.

இதோ உங்கள் பரிசு,

1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?

2. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?

4. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?

5. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?

6. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?

7. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?

8. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?

9. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்?

10. மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

1.கிரைண்டர் 2 கண் 3.அணில் 4, பள்ளிவால் 5, நட்சத்திரம்
6. பூட்டும்செருப்பும் 7.பூமி8. வாழை மர பட்டை 9...............
10. சளி அல்லது குடை ஏதோ எனக்கு தெரிஞ்சது எல்லாமே தப்புன்னு என் மானம் போகாம இருக்கனும்

சரிதான் நாகா

9.எறும்பு
10.பூசானம்

ஹாய் தோழீஸ்,

சரியான விடை இதோ,
01. கடல்
02. கண்
03. அணில்
04. சங்கு
05. கோலம்
06. பூட்டும் திறப்பும்
07. மின்விசிறி
08. பாய்
09. எறும்பு
10. காளான்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்