வாழைப்பழ கேசரி

தேதி: June 14, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - ஒரு கப்
பச்சை வாழைப்பழம் - 2
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 கப்
நெய் - ஒரு கப்
ஏலக்காய் - 3
முந்திரி - 10
திராட்சை - 6


 

ரவையை நெய் விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். ஏலக்காயை வறுத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் மிக்சியில் தூள் செய்து கொள்ளவும்.
முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
இரண்டு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதி வந்ததும் ரவையை போட்டு கிளறவும்.
ரவை வெந்தவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் கலக்கவும்.
பிறகு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் நெய்யை ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, இக்கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.


இது சத்யநாராயண பூஜைக்கு செய்யும் பிரசாதம்.

மேலும் சில குறிப்புகள்