ஸ்டெப் பை ஸ்டெப் ரசம்

தேதி: August 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

திருமதி. ருக்சானா அவர்கள், திருமதி. சீதாலெட்சுமி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த ஸ்டெப் பை ஸ்டெப் ரசம் இது.

 

வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு குழம்புப் பொடி(மிளகு, சீரகம், துவரம் பருப்பு சேர்த்துத் திரித்தது) - 1 1/2 தேக்கரண்டி
மல்லிப் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
பூண்டு - மூன்று பல்
துவரம்பருப்பு - ஆறு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
பச்சைக் கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
வெல்லம் அல்லது சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தக்காளி - மூன்று அல்லது நான்கு
எலுமிச்சம்பழம் - ஒன்று (பெரிது)
தாளிக்க - நெய், சீரகம் (தலா ஒரு தேக்கரண்டி)


 

முதலில் ரசம் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
துவரம்பருப்பில் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, பூண்டு எல்லாம் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
குழம்புப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகக் கொதிக்க விடவும்.
பின் வெந்த துவரம் பருப்பை கரைத்து அதில் ஊற்றவும். மல்லிப் பொடியை அதில் போடவும்.
நுரை கட்டி சேர்ந்து வரும் போது, அரைத்து வைத்துள்ள தக்காளிக் கரைசலை அதில் ஊற்றவும்.
மீண்டும் நுரை கட்டி வரும் போது கறிவேப்பிலையை கழுவி, கையினால் கிள்ளி போட்டு கொத்தமல்லி தழையை நன்கு பொடியாக நறுக்கி அதில் போட்டு உப்பு போடவும்.
அடுப்பை அணைத்து விட்டு நெய்யில் சீரகம் தாளித்து, ரசத்தில் சேர்த்து வெல்லம் அல்லது சீனியை சேர்த்துக் கிண்டவும்.
எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கவும். கரண்டியினால் கிண்டி விட்டு, ஒரு கை குளிர்ந்த நீர் தெளித்து, இரண்டு அல்லது மூன்று நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு திறந்து பார்த்தால் நன்கு தெளிந்து இருக்கும். பருகுவதற்கும், சாதத்தில் ஊற்றி சாப்பிடுவதற்கும் சுவையான ரசம் தயார்.

இந்த செய்முறையில் சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி ஒவ்வொரு ஸ்டெப்பாக செய்து பாருங்கள். மிகவும் சுவையான ரசமாக அமையும். வெந்த துவரம் பருப்பை அப்படியே கரைத்தும் ஊற்றலாம் அல்லது இரண்டு டம்ளர் கொதிக்கும் வெந்நீர் ஊற்றிக் கரைத்து, தெளிந்ததும் அந்த பருப்புத் தண்ணீரை மட்டும் சேர்க்கலாம். இந்த முறையில் ரசத்தில் பருப்பு வேஸ்ட் ஆகாது. பருப்பை தனியாக கலப்பருப்பாக உபயோகித்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா சூப்பரா இருக்கு உங்க ரசம் வாழ்த்துக்கள் .வெல்லம் போட்டா இனிக்காதா? by Elaya.G

Hi Ruksana,

I prepared this Rasam today. It was awesome. Thanks for giving this recipe. Without tamarind, good for health also.Keep posting...
@Elaya: No sweet taste :) I added sugar...

Always Think Positive

இந்த ரசம் அருமையாக இருக்கும் நானும் முன்பு செய்து இருக்கேன்

Jaleelakamal

oke kavi

Jaleelakamal

-

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!