முடக்கற்றான்கீரை குழம்பு

தேதி: August 5, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

முடக்கற்றான் கீரை - ஒரு கப்
பூண்டு - 5 பல்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து, கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் - 3
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

முடக்கற்றான் கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். புளியை ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து பொடிக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து வறுக்கவும். பின் மிக்ஸியில் பொடித்து தனியாக வைக்கவும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். தாளித்த பின் தனியா தூள் சேர்க்கவும்.
இதில் புளிக்கரைசல், பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த கீரை சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு பொடித்த பொடியை சேர்க்கவும்.
குழம்பை நன்றாக கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான ஆரோக்கியமான முடக்கற்றான் கீரை குழம்பு தயார்.

கொடியின் முன் பகுதியில் உள்ள கீரைகளை பயன்படுத்தினால் கசப்பு தன்மை இருக்காது. சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முடக்கற்றான் ல கூட குழம்பா! நாங்க இத வச்சு தான் விளையாடுவோம் சின்ன பிள்ளையா இருக்கப்போ என்னோட பாட்டி இத மருந்தா குடுப்பாங்க ந குடிசுருக்கேன்
இதகூட செய்ய சொல்றேன் நல்ல இருக்கு அக்கா by Elaya.G

வனி இந்த கீரை வச்சு தோசை தவிர வேற எதுவும் செய்ய தெரியாது. உங்க குறிப்ப பார்த்துதான் ரசம் வைக்க தெரிந்து கொண்டோம். இப்போ இதுல குழம்பு செய்யலாமானு ஆச்சிரியமா இருக்கு.இளங்கீரைல செஞ்சா கசக்காது. கீரை கிடைத்தால் செய்துப்பார்த்து பதிவிடுகிறேன்.

Super vanitha

இது மூட்டு வலி உள்ளவங்களுக்கு நல்ல மருந்து வனிதா. நல்ல குறிப்பு கொடுத்திருக்கீங்க

வனி முடக்கற்றான் கீரையில் குழம்பா இப்பதான் கேள்வி படறேன் ஆனா பார்க்கும்போதே ஆசையை தூண்டுது... வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி... ரொம்ப அருமை... முடக்கற்றான் கீரை மூட்டு வலிக்கு ரொம்ப நல்லது... எங்கம்மா ரசம் வைப்பாங்க... நல்லா இருக்கும்... இந்த குழம்பு குறிப்பையும் அம்மாகிட்ட சொல்றேன்... எங்க வீட்லயே இந்த கீரை வெச்சிருக்காங்க... அடிக்கடி சாப்பிட்டா நல்லது...
வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஆஹா முடக்கற்றான் கீரையில் குழம்பா.......சூப்பர்.....எனக்கு அப்படியே தூதுவளை கீரை கொழம்பும் ஞாபத்துக்கு வருது.....அதுவும் கிடைத்தால் செய்து போடுங்க வனி....நான் பார்த்தாவது ஆசையை தீர்த்துக்குறேன்...ஹ்ம்ம்.....

வாழ்த்துக்கள்

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து சாப்பிடுங்க, நல்லது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. கசப்பு இருக்கது, குழந்தைகளே சாப்பிட்டாங்க செய்தப்போ. செய்து பார்த்து சொல்லுங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம்... எங்க வீட்டில் வைத்தியத்துக்காகவே இதை அடிக்கடி செய்வாங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பாருங்க... கண்டிப்பா பிடிக்கும். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா வித்யா... மூட்டு வலிக்கு தான் அப்பாக்கு அடிக்கடி இதை சமைப்போம். நாங்களும் வீட்டிலேயே தான் வெச்சிருக்கோம். செய்து பாருங்க... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தூதுவளை இங்க நான் எங்க தேட... கிடைச்சா கண்டிப்பா அனுப்பிடுறேன். :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
முடக்கற்றான்கீரை குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு.அழகா செய்து இருக்கீங்க.இந்த கீரையை நான் சாப்பிட்டதே இல்லை.குறிப்பை விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

வனிதா வித்யாசமான குறிப்பாக உள்ளது நெறைய வகைல கீரை சமையல் அனுப்புங்க.வாழ்த்துக்கள்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

மிக்க நன்றி. செய்து சாப்பிட்டு எப்படி இருந்துதுன்னு மறக்காம சொல்லிப்போடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. தெரிந்ததை அவசியம் அனுப்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி முடக்கத்தான் கீரைல தோசை செய்து கொடுத்தாங்க என் அக்காவிற்கு .குழம்பு செய்து பார்த்ததில்லை.நீங்க செய்த குழம்பு நன்றாக உள்ளது .வாழ்த்துக்கள் வனி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிக்க நன்றி. செய்து பாருங்க, சுவை நல்லா இருக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா