மட்டர் கீ ரைஸ் சமையல் குறிப்பு - 19820 | அறுசுவை


மட்டர் கீ ரைஸ்

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : ஞாயிறு, 07/08/2011 - 02:00
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • பாஸ்மதி அரிசி- ஒரு கப்
 • பச்சை பட்டாணி- 75 கிராம்
 • நெய்- 4 ஸ்பூன்
 • வெங்காயம்- 2
 • சீரகம்- கால்ஸ்பூன்
 • மிளகு-6
 • கிராம்பு-3
 • ஏலக்காய்-3
 • பிரியாணி இலை-1
 • இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
 • பச்சை மிளகாய்-2
 • உப்பு-தேவைக்கு

 

 • பாத்திரத்தில் நெய்யை விட்டு சூடாக்கவும்
 • அதில் சீரகம்,மிளகு,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் இலை சேர்த்து வதக்கவும்
 • பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்
 • பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 • பின்னர் பட்டாணி சேர்த்து பாதியாக வேகும் வரை வதக்கவும்.
 • பின் கழுவிய பாஸ்மதியை சேர்த்து சிறிது நேரம் கிளறி பின்னர் 2 கப் நீர் விடவும்
 • நீர் வற்றும் நேரத்தில் தணலை மெதுவாக வைத்து தம்மில் போடவும்.
 • மட்டர் கீ ரைஸ் தயார்
வெங்காய ரைத்தா, மட்டன் குழம்பு, தாளிச்சா உடன் பரிமாறலாம். விருப்பப்பட்டால் கொத்தமல்லி புதினா சேர்க்கலாம்.