பாலக் அர்ஹர் தால்

தேதி: August 7, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு- 100 கிராம்
பாலக்- கால் கப்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நெய்-2 ஸ்பூன்
கடுகு-1/2 ஸ்பூன்
பொடியாய் நறுக்கிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-2
சீரகம்- கால்ஸ்பூன்


 

கீரையை சுத்தம் செய்து 2 இன்ச் நீள அளவுக்கு நறுக்கி கொள்ளவும்.

பருப்பை கழுவி அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தேவைக்கு நீர் சேர்த்து குக்கரில் வேக விடவும்

வாணலியில் நெய்விட்டு சீரகம்,கடுகு தாளிக்கவும்

கடுகு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வேக வைத்த பருப்பில் சேர்க்கவும்.

பின் பாலக் கீரையை சேர்த்து கொதிக்க விடவும். கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும்


சப்பாத்தி அல்லது சாத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்