பட்டாணி உருளை குருமா

image

வழங்கியவர் : ஆமினா

தேதி : ஞாயிறு, 07/08/2011 - 21:05

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3.75
4 votes
Your rating: None
 

 

  • பட்டாணி- 50 கிராம்
  • உருளை-கால் கிலோ
  • வெங்காயம்-2
  • தக்காளி-2
  • பச்சை மிளகாய்-2
  • கொத்தமல்லி-சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
  • தேங்காய்- கால் மூடி
  • கறிமசாலா தூள்- 6 ஸ்பூன்

 

  • பட்டாணியும் உருளையும் பாதியாக வேக வைக்கவும்
  • உருளையை தோலுரித்து நான்கு பாகமாக நறுக்கிக்கொள்ளவும்
  • தேங்காயை மையாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து ஒரு சுற்று விடவும்
  • எண்ணெயில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  • பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  • பின்னர் கொத்தமல்லி, தக்களி சேர்த்து கிளறவும்
  • பின் தேங்காய் விழுதில் நீர் கலந்து கரைத்து அதில் சேர்க்கவும்
  • மசாலா வாசனை போனதும் உருளையும் பட்டாணியும் சேர்த்து வேகும் வரை வைத்திருந்து பின் இறக்கவும்

Note:

சப்பாத்தி பூரி இடியாப்பம் தோசை ஆகியற்றுடன் சாப்பிடலாம்







வாழ்த்துகள் ஆமி

சூப்பர்ப் ரெசிபி. டிரை பண்ணி பார்க்கிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப நன்றி மஞ்சு

செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா