கர்ப்பமான பெண்கள் தூங்குவது சரியா? தவறா?

நான் 4 மாதம் கர்ப்பம் ஆக உள்ளேன். வசிப்பது கணவருடன் ஓமன் நாட்டில். என் வேலையை எல்லாம் முடித்து விட்டு புத்தகங்கள் படிப்பது, painting செய்வது என நேரத்தை திட்டமிட்டு செயல்படுகிறேன். தூங்கினால் ஒரு வித மயக்கமாக உள்ளது ஆதலால் முடிந்தவரை தூங்குவதை தவிர்க்கிறேன், ஆயினும் ஒரு சில நாள் மட்டும் களைப்பாக உள்ளதால் தூங்கி விடுகிறேன். என்னுடைய மாமியார் தூங்காதே, அது நார்மல் deliveryku உதவாது. குழந்தை சோம்பேறி ஆயிடும், எதிர்ப்பு சக்தி இருக்காது என்கிறார். ஒரு சிலர் நன்றாக தூங்கு என்கிறார்கள். குழப்பமாக உள்ளது. உதவுங்கள் தோழிகளே.............

கண்டிப்பாக தூங்கணும். தூக்கம் வரும்போது தூங்கினாதா பாப்பாக்கு நல்லது. நல்லா பசிக்கும் தூக்கமும் வரும். பசிக்கும்போதெல்லாம் நல்ல சத்தானதா சாப்பிடுங்க நல்லா தூங்குங்க. இது ரெண்டும்தா இப்போதைக்கு உங்க வேலை. நான் monthly செக்கப் போறதுக்கு முதல்நாள் சரியா தூங்காம இருந்ததால என் husband டாக்டர்ட ரொம்ப திட்டுவாங்கினாங்க. உனக்கு நல்ல குழந்தை வேணும்னா உன்னோட wife நல்லா தூங்கனும். அவங்கள தூங்க வைக்கறது உன்னோட வேலைனு திட்டினாங்க. so eat well, take rest..

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்