குலாப் ஜாமூன்

தேதி: June 15, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் பௌடர் - 2.5 கப்
நெய் அல்லது டால்டா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 5 கப்
பேக்கிங் பௌடர் - 1 ஸ்பூன்(மீடியம்)
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 1/2 கப் (பொரிப்பதற்கு)
பால் - கலப்பதற்கு


 

சர்க்கரை விடுத்து மற்ற அனைத்து சாமான்களை பாலுடன் சேர்த்து பிசையவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி, அதை நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரிக்கும் பொழுது, உருண்டைகள் டார்க் பிரௌன் நிறம் ஆகும் வரை காத்திருந்து பிறகு எடுக்கவும்.
5 கப் சர்க்கரையை 5 கப் தண்ணீரில் கரைத்து 1 கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.
ஜாமூன் உருண்டைகளை பொரித்தவுடனே பாகில் போடவும்.
எல்லா உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடம் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.
குறைந்தது 3 - 4 மணி நேரம் குலாப் ஜாமூன் ஊற வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நித்யா,
"பேகிங்பௌடர்"என்றால் 'சோடாப்பு'தானே? "பால் கலப்பதற்கு" என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், ஆனால் அளவு இல்லையே? ப்ளீஸ், பால் அளவு சொல்லவும்!

மன்னிக்கவும்... பேகிங் பௌடர்-பேகிங் சோடா இரண்டும் வெவ்வேறு பொருட்கள். இதை நான் குறிப்பிட்டிருக்கவேண்டும்..ஆனால் மறந்துவிட்டேன். உங்களிடம் பேகிங் பௌடர் இல்லாவிடில் சரியாக 1 சிட்டிகை சோடாஉப்பு போட்டு செய்து பாருங்கள். சில சமயங்களில் சோடாஉப்பு காலை வாரிவிடும்... 1/4-1/2 கப் பால் கலப்பதற்கு எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி நித்யா!