மீட் ஷெல்ஸ்

தேதி: August 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (2 votes)

 

எலும்பில்லாத சிக்கன் / மட்டன் - 200 கிராம்
எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது )
சிகப்பு குடை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் - கால் கப்
சோர் க்ரீம் (sour cream) - 2 மேசைக்கரண்டி
மல்லி தழை - அலங்கரிக்க
சீஸ் - அரை கப்
பேஸ்ட்ரி ஷீட்ஸ்


 

சிக்கனிலோ அல்லது மட்டனிலோ எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு தூள் போட்டு பிரட்டி ஆலிவ் எண்ணெயை சூடாக்கி அதில் இந்த கலவையை போட்டு வேக விடவும். வெந்ததும் தனியாக எடுத்து ஆற வைத்து பொடியாக நறுக்கவும்.
அதே பானில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
அதன் பிறகு சிக்கன் ஸ்டாக் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கறியை சேர்க்கவும்.
ஓரளவு வதங்கியதும் தக்காளி, மைதா மாவு மற்றும் க்ரீம் சேர்த்துக் கிளறவும். (மாவு, அந்த ஸ்டாக்கை திக்காக ஆக்குவதற்காக சேர்ப்பது). கலவை நன்கு சுருண்டு திக்கானதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவவும்.
ஒரு மஃபின் பான் எடுத்து குக்கிங் ஸ்ப்ரே அடித்து அதில் பேஸ்ட்ரி சீட்டை இப்படி வெட்டி வைக்கவும். இதனை 400 F முற்சூடு பண்ணிய அவனில் பதினைந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
பதினைந்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து ஐந்து நிமிடம் ஆறியப்பின் கலவையை வைத்து அதன் மேல் சிறிதளவு சீஸ் தூவி மறுபடியும் அவனில் வைக்கவும்.
ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து எடுத்து பத்து நிமிடம் ஆற விட்டு மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான சுலபமான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி. பார்ட்டிக்கு ஏற்ற மெனு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படிங்க, இப்படி புதுசு புதுசா பண்ணி அசத்தறீங்க?
சொல்ல வார்த்தையே இல்ல!! பிரமாதமான ஸ்நாக்ஸ்....
அவன் இல்லாம பண்ண வழி இருக்கா? :-(

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

லாவண்யா சூப்பரான பார்ட்டி ரெசிப்பி யம்மியா, அசத்தலா இருக்கு.

லாவண்யா... ஒரு புதிய வித்தியாசமான குறிப்பு... அப்பப்பா எப்படித்தான் யோசிக்கறீங்களோ... அதுசரி என்னை மாதிரி ஆளுங்களுக்கு உபயோகப்படும்... :) கண்டிப்பா ஒரு நல்ல பார்ட்டி ரெசிபி... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

ரொம்ப சூப்பர். கண்டிப்பா இந்த வார அறுசுவை ஸ்பெஷல் குறிப்பு இது தான்னு நினைக்கிறேன்... பார்ட்டி ஸ்பெஷல்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்.........

யம்மியா இருக்கும் . செய்து பார்க்கணும் ஒருநாள்!!

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

லாவண்யா,
200வது குறிப்பா?வாழ்த்துக்கள்.மேலும் நிறைய குறிப்புகள் தந்து நிறைய கோல்ட் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

பார்க்கும்போதே சாப்பிடதூண்டுதே வாழ்த்துக்கள் லாவண்யா..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஒரு ஓ..........................போடுங்க லாவண்யாவுக்கு நல்ல குறிப்பி எனக்கு புடுச்சா உடனே செய்துருவேன்
இப்ப நோம்பு செய்ய முடியாது ஆனா நோம்பு திறக்க இதுதான் செய்ய போறேன் பாய் பாய்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

என்னுடைய குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

முதல் ஆளாய் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சுகி. அவன் இல்லாமலும் செய்யலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவன் இல்லாமல் பஃப்ஸ் செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் குழிப்பணியார சட்டியில் இந்த சீட் வைத்து மூடி போட்டு வைத்து ட்ரை பண்ணி பாருங்கள்..... (இது எனக்கு தோணின வழி....வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் கண்டிப்பாக சொல்லி உதவவும்)

செய்து பார்த்துட்டு சொல்லுங்க....வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி வினோஜா.

கண்டிப்பாக இது பார்ட்டி ரெசிபி தான்....செய்து பார்த்துட்டு சொல்லுங்க....வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி வித்யா.

வனி அப்படியா சொல்றீங்க....கேட்கவே சந்தோஷமாக இருக்கு......ஒருவேளை விளக்கப்பட குறிப்பில் இந்த வாரம் வந்ததில் இதுவாக இருக்கலாம்.....வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

கண்டிப்பாக செய்து பாருங்க....அப்படியே மறக்காமல் எப்படி இருந்தது என்று வந்து சொல்லுங்க....வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஆமினா.

அன்பரசி....வர வர அசைவ குறிப்பெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா.....பலே பலே....வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சாப்பிட தோன்றினால் தட்டோட எடுத்துக்கோங்க ஸ்வர்ணா.....வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஓ போட்டதுக்கு மிக்க நன்றி. ஏதோ என்னுடைய இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்ததில் மிக்க சந்தோஷம். கண்டிப்பாக எப்படி இருந்தது என்று வந்து சொல்லி என்னை மேலும் உற்சாக படுத்துங்க பல்கிஸ். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எப்படி தின்க் பண்ணுறீங்க??
வித்தியாசமான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
எல்லாம் கிட்னியை வைத்து தான் :)

இது என் எஸ்பெரிமண்ட்.....நன்றாக வந்ததால் ஷேர் பண்ணினேன்..... வாழ்த்துக்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழியே உங்கள் குறிப்பு மிகவும் அருமையாக உள்ளது ,உங்கள் குறிப்பை எனது விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன் ,ஆனால் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் plzzzz,என்னிடம் combination microwave oven உள்ளது ,அதில் இந்த recepie யை எப்படி செய்வது,oven யை எந்த modeல் வைக்க வேண்டும் உதவுங்கள் plzzzzzzzz,,,,,,

உங்களின் அன்பான பின்னூட்டம் மிகுந்த மழிச்சியை அளித்துள்ளது. உங்களின் அவனில் கன்வென்ஷனல் மோடு இருக்கிறதா? அதில் கேக் செய்வீர்களா? அப்படியென்றால் இதை சுலபமாக செய்துவிடலாம். கன்வென்ஷனல் மோடில் வெப்பநிலையை சரி செய்து குறிப்பிட்டுள்ள வெப்பநிலையை செட் செய்து சிறிது நேரம் ப்ரீஹீட் செய்யவும். பிறகு எல்லாமே குறிப்பில் உள்ளவாறே செய்யலாம். நான் இது வரையில் அந்த மாதிரி அவனை உபயோகித்ததில்லை, அதனால் அதை பற்றி தெளிவாக விளக்க தெரியவில்லை. மன்னிக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா சூப்பர் குறிப்பு அவனை நீங்க நல்ல முறையில் பயன் படுதுறிங்க.நான் சூடு பண்ண காய் வேக வைக்க மட்டும் பயன்படுத்துறேன்..

உங்கள் குறிப்பை செய்து பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாழ்த்துக்கு நன்றி குமாரி. கண்டிப்பாக செய்து பாருங்க....மறக்காம வந்து பின்னூட்டமும் கொடுங்க :)

இது கன்வென்ஷனல் என்பதால் மட்டுமே உபயோகிக்கிறேன். என் வீட்டிலும் உள்ள மைக்ரோவேவ்-வை நான் அதிகம் உபயோகிக்கவே மாட்டேன். அது உடலுக்கு அவ்வளவாக நல்லதல்ல என்று எங்கோ படித்த ஞாபகம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்னோட ஓவன் கூட கன்வென்ஷனல் கிரில் உள்ளதுதான் பசங்களுக்கு கேக் செய்யத்தான் use பண்ணி இருக்கேன்.

நன்றி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அப்போ கூடிய சீக்கிரத்தில் உங்க கிச்சனிலிருந்து ஒரு அருமையான கேக் ரெசிபியை எதிர்ப்பார்க்கலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!