தக்காளி குழம்பு

தேதி: August 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (8 votes)

 

பெங்களூர் தக்காளி - 5 (பெரியது)
சின்ன வெங்காயம் - 15 எண்ணிக்கை
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
சக்தி கறி மசாலாதூள் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மல்லித்தழை, புதினா - சிறிது
அரைக்க :
தேங்காய் - 2 துண்டு
கசகசா - 3தேக்கரண்டி
தாளிக்க :
சோம்பு - கால் தேக்கரண்டி
கல்பாசி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி


 

தக்காளியை சுடுத்தண்ணீரில் போட்டு தோல் உரித்து சிறு துண்டாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் (கசகசாவை சுடுத் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அரைக்கவும். (அப்பொழுது தான் மிக்ஸியில் நைசாக அரைக்க முடியும்.)
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள், மிளகாய் தூள், கறி மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் நறுக்கின தக்காளி, அரைத்த தேங்காய் விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
கடைசியாக மல்லித்தழை, புதினா சேர்த்து பரிமாறவும்.

இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சீக்கரம் பண்ணி பாத்துடறேன், தேங்காய் சேர்த்தது இல்லை.
கலர் பாத்தாலே சாப்பிட தூண்டுது , வாழ்த்துக்கள் மா

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பாத்திம்மா தக்காளி குழம்பு வீட்டுல செய்வாங்க இது ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த குழம்பு கலருக்காகவே செய்து பார்க்க தோணுது சூப்பர்.

பாத்திமா... எனக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி குழம்பு... நான் எல்லாத்தையும் வதக்கி அரைச்சு செய்வேன்... உங்க முறையிலும் செய்து பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

நலமா?

நான் இப்படி தான். வித்தியாசம் என்னவென்றால் தக்காளியை தோல் நீக்காமல், கசகசா இல்லாமல், பட்டை பூண்டு எல்லாத்தையும் தேங்காயோடு சேர்த்து அரைத்து செய்வோம். இட்லி இந்த குழம்பை அடிச்சுக்கவே முடியாது. வாழ்த்துக்கள்மா

அன்புடன்
பவித்ரா

ரொம்ப நல்லா இருக்கு கலரும், குழம்பும்... :) பார்த்ததும் நாளைக்கே செய்துடலாம்னு தோணுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபாத்திமா அம்மா,
வித்தியாசமான குழம்பு.பார்க்கவே சூப்பரா இருக்கு.விரைவில் செய்துட்டு பதிவு போடுறேன்.வாழ்த்துக்கள்.

பாத்திமா இன்னைக்கு காலைல உங்க தக்காளி குழம்பு செய்ய போறேன் சப்பாத்திக்கு,பார்த்தாலே நன்றாக வரும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் பாத்திமா, சூப்பர் குழம்பு ரொம்ப டெஸ்டா இருக்கும் போல நானும் ஒரு நாள் செய்து பார்க்கிரேன். வாழ்த்துக்கள்;))

உன்னை போல பிறரையும் நேசி.

செம கலரா இருக்கே தக்காளி குழம்பு கண்டிப்பா செய்துடுறேன் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.ஹாய் பாத்திமா அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா.உங்கள மாதிரியே என்னக்கும் சமையல் ரெசிபீஸ் அனுப்பனும்னு ஆசை ,ஆனா எப்படி அனுப்பனும்னுதன் தெரியல,எந்த இமைல்லுக்கு அனுப்பனும்னு தெரியல,plz கொஞ்சம் சொல்லுங்க அக்கா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

முதல் ஆளாய் வந்தது மகிழ்ச்சி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிடா

வினோ வருகைக்கு நன்றிடா

இந்த முறையிலும் செய்து பாருங்கள் வாழ்த்துக்கு நன்றி

நலம் வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றிடா

வனி வருகைக்கு நன்றி

அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

குமாரி வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செய்துட்டு சொல்லுங்கள்

தேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஸ்வர்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வலைக்கும் சலாம்........<arusuvaiadmin@gmail.com>, இந்த மெயிலுக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பா போட்டோ எடுத்து அனுப்பனும் எழுத்து பிழை இல்லாமல் அனுப்பனும்
சீக்கிரம் உங்கள் குறிப்புக்காக காத்துஇருக்கோம்

மன்னிக்கவும் பாத்திமா அக்கா எந்த ஈமெயில் தெரியல,plz சொல்லுங்க

arusuvaiadmin@gmail.com

ஹமீதா அம்மா,

அருமையான குழம்பு

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவி மிக்க நன்றி

பாத்திமா அம்மா உங்க தக்காளி குழம்பு நல்லா இருந்த்து ,இடியாப்பத்திற்கு பால் குழ்ம்புடன் சைட் டிஷ்சாக செய்தேன், வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

செய்தாச்சா மிக்க நன்றி

ஹாய் hameed ,

நான் இன்னைக்கு இந்த receipe try பண்ணேன் . சூப்பர் மற்றும் நல்ல taste .. my husband கு ரொம்ப பிடிச்சது . thank u

உங்க தக்காளி குழம்பு நல்லா இருந்தது. சூப்பர்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

உங்க தக்காளி குழம்பு நல்லா இருந்தது. சூப்பர்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

நான் இந்த குலம்பு செய்து பார்த்தேன். சுவை நன்றாக இருந்தது