சிக்கன் சேமியா பிரியாணி

தேதி: August 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சிக்கன்..............1/2கிலோ

சேமியா..............400கிராம்

வெங்காயம்.............3

தக்காளி...................2

இஞ்சிபூண்டு பேஸ்ட்.........3தேக்கரண்டி

பட்டை,கிராம்பு, ஏலக்காய்த்தூள்..............1/2 தேக்கரண்டி

பச்சைமிளகாய்..............4

மல்லி இலை,புதினா.........ஒருகையளவு

மிளகாய்த்தூள்..............2தேக்கரண்டி

மஞ்சள்தூள் ............1/4தேக்கரண்டி

எலுமிச்சை பழம்............1சிறியது

தயிர்...........1குழி கரண்டி

எண்ணெய்............2குழிகரண்டி

உப்பு.......தேவைக்கு

ஏலக்காய்,கிராம்பு தலா...........2

பட்டை ........1துண்டு

கல்பாசி இலை..........சிறிது

நெய்.............4தேக்கரண்டி


 

சேமியாவை வறுத்து வைக்கவும்சிக்கனை கழுவி வைக்கவும் வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும் மிளகாயை கீறிவைக்கவும்

அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி இலை,பட்டை,கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தை சிவக்க வதக்கி அதனுடன் தக்காளி இஞ்சிபூண்டு சேர்த்து மிளகாய்த்தூள் மஞ்சள்தூள்சேர்த்துபச்சைவாசனை போக வதக்கவும்

வதக்கியதில் சிக்கன்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கி சிறு தீயில் மூடி வேகவிடவும்
(தண்ணீர் சேர்க்க வேண்டாம் கோழியில் வரும் தண்ணீர் போதும்)

சிக்கன் வெந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர்(400மில்லி)சேர்த்து கொதிக்கவிடவும் கொதிவரவும் சேமியா சேர்த்து கிளறி அதனுடன் லெமன் சாறு மல்லி இலை புதினா நெய் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும் சிறிது நேரம் கழித்து அடியில் இருந்து ஒருமுறை கிளறி பின் பரிமாறவும் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்னைக்கு நைட் இந்த டிஷ் தான் மா...

ஃபாத்திமா........சேமியாவில சிக்கன் பிரியாணி புதுசா இருக்கே..... கண்டிப்பா சூப்பரான, வித்தியாசமான, எளிமையான பிரியாணிதான். வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ப்ரியா லேட்டான பதிவுக்கு சாரி நன்றி