புதினா சிப்ஸ்

தேதி: August 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

புதினா - 1 கட்டு
மைதா - 1 கப்
இஞ்சி - 1/2 இஞ்ச்
பூண்டு - 4 பல்
ஓமம் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தெவையான அளவு


 

ஈரம் இல்லாத புதினாவை இஞ்சி, பூண்டு, ஓமம், உப்பு சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் மைதாவை சேர்த்து பிசைந்து சப்பாத்திபோல் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை காயவைத்து சிப்ஸ் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
பொரித்த சிப்ஸ் துண்டுகளில் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடவும்.
மாலை நேர ஸ்னாக்ஸ் ரெடி.


மேலும் சில குறிப்புகள்