ஓட்ஸ் உணவு வகை.....

ஹாய் தோழிஷ்.. எல்லோரும் நலமா? அனைவருக்கும் இந்த புன்னகை ன் அன்பு வணக்கங்கள்... எனக்கு ஒரு சந்தேகம்..
சொல்லுங்க ப்ளீஸ்...
ஓட்ஸ் ல என்ன என்ன உணவு வகைகளை சமைக்கலாம்... கொஞ்சம் சொல்லுங்கள் தோழிகளே..
உடலுக்கு ஓட்ஸ் நல்லதா.. எந்தவகையில் நல்லது? அதையும் கொஞ்சம் சொல்லவும்..
எப்பொழுது ஓட்ஸ் உணவை எடுத்துகொள்ள வேண்டும்?

ஓட்ஸ் உணவு வகைகள்... http://www.arusuvai.com/tamil/recipes/220 இந்த link இல் போய் பாருங்கள்

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மிக்க நன்றி ரிசானா...

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

ஒட்ஸ் பொதுவா உடலுக்கு நல்லது தான். ரிச் இன் சாலுபில் ஃபைபர். (soluble fibre). இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL) குறைக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஹார்மோன் பிரெச்சனை, கேன்சர் போன்றவை ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட் எல்லாம் கிடைக்கும். முக்கியமா உடல் எடை குறைக்க நினைக்கிறவங்க அதிகம் பயன்படுத்தறாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓட்ஸ் உடம்புக்கு எந்தவிதத்தில் நல்லதுன்னு வனி சொல்லிட்டாங்க.
காலை ஓட்ஸ்கஞ்சி பால் ஜீனிசேர்த்து குடிக்கலாம். லேசாக வறுத்து
வெங்காயம் சேர்த்து உப்மா செய்யலாம். இன்னும் நிறைய செய்யலாம்.
நல்லா ருசியாகவே இருக்கும்.

மேலும் சில பதிவுகள்