டில் கீரை ஃபிலாபில்

தேதி: August 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

ஃபிலாஃபில் இது லெபனான் நாடு, சவுதி, துபாய் மற்றும் அரபு நாடுகளில் மிகப்பிரபலம்.

 

வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம்
தில் கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி தழை - சிறிது
பூண்டு - மூன்று பல்
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை எள் - 1 1/2 தேக்கரண்டி +1 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று (பெரியது)
ப்ரெட் கிரம்ஸ் - ஒரு மேசைக்கரண்டி


 

கொண்டைக்கடலையை இரவே ஊற வைக்கவும். சீரகம் மற்றும் எள்ளை கருகவிடாமல் வறுத்து வைக்கவும். தில் கீரை மற்றும் சிறிது கொத்தமல்லி தழையை மண்ணில்லாமல் அலசி நறுக்கி வைக்கவும்.
ஊறிய கொண்டைக்கடலையில் வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், பூண்டு, பாதியளவு எள், பேக்கிங் பவுடர், தில் கீரை, கொத்தமல்லி தழை சேர்த்து முக்கால் பதத்துக்கு அரைக்கவும்.
அரைத்த கலவையில் மீதி உள்ள எள், பிரெட் க்ரம்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெயை காய வைத்து, கலவையை உருட்டி வடைக்கு தட்டுவது போல் நன்கு தட்டாமல் லேசாக தட்டி போட்டு பொரிக்கவும்.
மறுபுறம் திருப்பி போட்டு நல்ல கிரிஸ்பியானதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.
சுவையான தில் கீரை ஃபிலாஃபில் ரெடி. இதை ஹமூஸ், குபூஸுடன் சேர்த்து சாண்ட்விச் போல சாப்பிட அருமையாக இருக்கும்.

இதில் ஒரிஜினல் ஃபிலாபில் பார்சி இலைகள் சேர்ப்பார்கள். பச்சைமிளகாய்க்கு பதில் வெள்ளை மிளகு தூள் சேர்ப்பார்கள் என நினைக்கிறேன். இதில் நான் தில் கீரை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்துள்ளேன். இது நான் செய்து பார்த்தது, ஏற்கனவே கொண்டைக்கடலை வடை, ஃபிலாஃபில் இரண்டு மூன்று வகைகளில் செய்து இருக்கேன். அதில் இது ஒரு வகை. தில் கீரையில் அயர்ன் சத்து அதிகம், கொண்டைக்கடலையிலும் புரோட்டீன் சத்து உள்ளது. பிள்ளைகளுக்கு சப்பாத்தியில் வைத்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம். தெருவுக்கு தெரு நம் ஊர்களில் வடை சமோசா கடைகள் இருப்பது போல் இங்கு ஷவர்மா, ஃபிலாஃபில் சாண்ட்விச் கடைகள் இருக்கும். ஷவர்மா சாண்ட்விச் அசைவம், ஃபிலாஃபில் சாண்ட்விச் சைவம், சைவ பிரியர்களுக்கு அருமையான உணவு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

this recipe i was taste in hotel only.i added my favorite list. thank you very much to such a good recipe.regards.g.gomathi.

ஹாய் நானும் ட்ரை பண்றேன் நல்லevening snacks அண்ட்healthy food too. டூ இன் ஓனே. ஆனா நான் london la இருக்கேன் தில் கீறன என்ன.plsசொல்றிங்கள.

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

ஹாய் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க,நான் சவுதி ல இருக்கேன். ஈத் முபாரக்

ஃபலாஃபல் சூப்பரா இருக்கு.....எனக்கு ரொம்ப இஷ்டமான ஒரு ரெசிபி.....நீங்கள் தில் சேர்த்து செய்திருப்பதை பார்த்தாலே சாப்பிட தோணுது.....அருமையான குறிப்பு.வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஜலீலா அக்கா,
தில்கீரை ஃபலாஃபெல் அழகா செய்து காட்டி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.ஃபலாஃபெல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா ட்ரை பண்றேன்.ஆனால் தில்கீரைனா என்ன?

ஜலீலா அக்கா நல்ல குறிப்பு. mouth watering recipe :) தில் கீரைக்கு பதிலா வேற என்ன சேர்க்கலாம்.

KEEP SMILING ALWAYS :-)

நாகா ராம் டில் கீரைக்கு பதில் கொத்துமல்லி கீரை சேர்த்து கொள்ளுங்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

Jaleelakamal

ஹர்ஷா டில் கீரை (Dill leaves ) என்பது புல் கீரை போல இருக்கும், அதை சாம்பார் தான் வைப்பது, , ஆனால் இதில் ரிச் அயர்ன் இருக்கு,மற்றபடி சமைத்தால் பிடிக்கல, பிள்ளைகள சாப்பிடனும் என்றால் இப்ப்படி பிலாஃபில் கூட சேர்த்து அரைத்து சுட்டா நல்ல இருக்கு.உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

Jaleelakamal

லாவன்யா இது எல்லோருக்குமே ரொம்ப பிடித்த ரெசிபி, அப்படியே குபூஸ் ஹமூஸ் வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிடால் ரொம்ப ஜோராக இருக்கும்.
வெளிநாடுகளில் அங்காங்கே நம் ஊரில் மசால் வடை போல லெபனீஸ் கடைகளில் இது கிடைக்கும் ஆனால் அவர்கள் செய்வது இன்னும் ரொம்ப் நல்ல இருக்கும்.
சவுதியிலும் உம்ரா போயிருந்த சமையம் வாங்கி சாப்பிட்டு இருக்கோம்.

Jaleelakamal

பஸரியா ரமளான் கரீம், நான் துபாயில் இருக்கிறேன்.

Jaleelakamal

பர்வீன் ஹ்மீத். டில் கீரை - Dill Leaves கூகுலில் இப்படி அடித்து தேடி பாருங்கள் உஙக்ள் இடத்தில் கிடைக்குதான்னு தெரியல , இங்கு அரபிகள் நிறைய பயன் படுத்துவார்கள்

Jaleelakamal

கோமதி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி செய்து பார்த்து உங்கள் கருத்தை வந்து சொல்லுங்கள்.

Jaleelakamal

ஜலீலா மேடம்,

அருமையான குறிப்பு செய்துவிட்டு சொல்கிறேன்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பேரு வித்தியாசமா சூப்பரா இருக்கு. பார்ட்டிக்கு ஏத்த டிஷ்
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கவிதா செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்

Jaleelakamal

ரம்யா இது அரபு நாட்டில் கிடைக்கும் நம்மூர் வடை போல.
செய்து பாருங்கள்

Jaleelakamal

ஜலீலா மேடம் நோன்பு ஸ்பெஷலா குறிப்பு நல்லா இருக்கு. தில்கீரை தெரியல. நீங்க கொத்தமல்லி வைச்சு செய்யலாம் சொல்லி இருக்கீங்க. சீக்கிரம் செய்து பார்த்துவிடுகிறேன்.

ஜலீலா சிஸ்டர் நோன்புக்கு ஏற்ற அருமையான குறிப்பு குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நாளை ட்ரை பண்ணி பார்க்கிறேன். வெள்ளைல்க் கொண்டைக் கடையில் மட்டுமா செய்யனும் அத்தோடு 250 கிராமில் எத்தனை செய்யலாம்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பூங்காற்று
பிலாஃபில் என்றால் அது வெள்ளை கொண்டைகடலையில் தான் நல்ல இருக்கும்.
நிறைய தடவை செய்து இருக்க்கேன்
எப்படியும் 20 பிலாபில் வரும்.

Jaleelakamal

வினோஜா செய்து பாருங்கள்

கொத்துமல்லி இலை தின் கீரை சேர்க்காமல் செய்தாலும் நல்ல வரும்
நான் என் பிள்ளைகளை கீரை சாப்பிடவைக்க அதில் கலந்து கொண்டேன்.
பிலாபில் எல்லோருக்கும் பிடிக்கும் அதில் கீரை கலந்தால் ஈசியா உள்ளே போய் விடும் ..

Jaleelakamal