சௌசௌ கிரேவி

தேதி: August 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (8 votes)

 

சௌசௌ - ஒன்று (பெரியது)
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
தேங்காய் - 3 பத்தை(விழுதாக அரைத்துக் கொள்ளவும்.)
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - இரண்டு
பிரிஞ்சி இலை - ஒன்று


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சௌசௌவை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள சௌசௌ துண்டுகளை சேர்க்கவும்.
இதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
சௌசௌ நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான சௌசௌ கிரேவி தயார். இது சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருத்தமான சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அன்பரசி இதில் நான் கொஞ்சம் பாசி பருப்பு வேக வைத்து சேர்ப்பேன்.

நீங்க நல்லா செய்து இருக்கீங்க சௌ சௌ கிரேவி, உங்க முறைப்படி செய்து பார்க்கிறேன் ..வாழ்த்துக்கள்.

12 படம் அனுப்பி இருகின்களே எப்படி எந்த மெயில் ல இருந்து அனுபுனிங்க அன்பு.எனக்கு ஜிமெயில் ல ஐந்து அல்லது ஆறு படதுகுமேல அனுப்ப முடியல அதான் கேட்டேன்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

each step by step photos are very nice.i will try your recipe.keep it up.regards.g.gomathi.

சூப்பர் குறிப்பு. நல்ல கலர்... பார்த்தாலே அழகா இருக்கு. சாப்பிட்டுட்டு வந்து சொல்றேன். சௌசௌ வாங்கிட்டேன்... நாளை வந்துடுறேன்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

குமாரி,
முதலாவதாக வந்து பதிவு போட்டதற்கு நன்றி.பாசிபருப்பு சேர்த்தால் கூட்டு போல ஆயிடுமே.அதுவும் சௌசௌ பாசிபருப்பு கூட்டில் பட்டை,லவங்கம்,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்க்க மாட்டோம்,இல்லையா?
இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.செய்து பாருங்க.

கேமராவில் இருக்கும் Settingsல் Picture Sizeஐ (Large,Medium,SmallSize) Small size வைத்துக் கொள்ளுங்கள்.அப்போ ஃபோட்டோவின் ஃபைல்சைஸ்(File size)குறையும்.ஒவ்வொரு ஃபோட்டோவும் மேக்சிமம் 2MB தான் வரும்.நான் யாஹூவில் இருந்து அனுப்புறேன்.அதில் மேக்சிமம் 25MB மட்டும் அட்டாச் பண்ணலாம்.Gmail பற்றி ஐடியா இல்லை.

கோமதி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க.

வனிதா,
சௌசௌ வாங்கிட்டீங்களா?சூப்பர்.சௌசௌவில் வழக்கமா செய்யும் சாம்பார்,பொரியல்,கூட்டை விட இந்த க்ரேவி நல்லா இருக்கும்.எனக்கு ரொம்ப பிடிச்சது.ட்ரை பண்ணி பாருங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.
உங்க பின்னூட்டத்துக்காக காத்திருக்கேன்.;-)

சௌசௌ வச்சு அவ்வளவா எதுவும் பண்ணவதில்லை. இது வித்தியாசமா புதுவிதமா இருக்கு பா. செய்து பாக்குறேன்........

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சௌசௌவில் கிரேவியா.....பார்க்கவே சூப்பராக இருக்கு.....கண்டிப்பாக செய்து பார்த்துட்டு சொல்றேன்.....வாழ்த்துக்கள்.

அன்பரசி என்றாலே கலர்புல் என்னுமளவுக்கு சூப்பர் கலர்ல இருக்கு உங்க குறிப்பெல்லாம்...:)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் பாசிபருப்பு சேர்த்து செய்வேன். இது மாதிரி செஞ்சதில்ல. விருப்பபட்டியல்ல சேர்த்தாச்சு :) சாப்டுட்டு ரிப்லை பண்றேன்.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் ஹர்ஷா... சூப்பராக இருக்கு சௌசௌ கிரேவி. போட்டோஸ் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. எங்க அம்மா இதே போல செய்து கடைசியில் தேங்காய் எண்ணெய்யில் தாளித்து சேர்ப்பார்கள். சுவையும் மணமும் சுண்டி இழுக்கும். அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

அன்பு நான் பாசிபருப்பு சேர்த்து செய்து இருக்கேன் இந்த மாதிரி செய்ததில்லை நோன்பு முடியவும் தான் வெஜ்பக்கம் வரனும் செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

ஹர்ஷா செள செள என்பது என்ன காய், வெள்ளரிக்காயா? அல்லது வெள்ளரிக்காயிலும் இப்பிடி பண்ணலாமா? ப்ளீஸ் யாராவது சொல்லுங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹர்ஷா... இதுவரை நான் சௌ சௌ தேங்காய் அரைத்து செய்ததில்லை... பருப்பு சேர்த்து மட்டுமே செய்திருக்கேன்... கண்டிப்பா இதை செய்து பார்க்கிறேன்... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

அன்பரசி,

வித்தியாசமான சௌசௌ கிரேவி

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமி,
கண்டிப்பா செய்து பாருங்க.சுவையும் வித்தியாசமா இருக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.

லாவண்யா,
கலர்ஃபுல் எல்லாம் கேமரா செய்யும் வேலை.சௌசௌ கிரேவி நல்லாதான் இருக்கும்.தைரியமா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

நாகா,
விருப்ப பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

ஸ்ரீசாய்லக்ஷ்மி,
தேங்காய் எண்ணெயில் தாளித்தது இல்லை.கண்டிப்பா அடுத்தமுறை செய்கிறேன்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்க.

ஃபாத்திமா அம்மா,
நோன்பெல்லாம் எப்படி போகுது? நோன்பு முடிந்ததும் நேரம் கிடைக்கும் போது செய்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

பூங்காற்று,
சௌசௌ என்பது ஆங்கிலத்தில் CHAYOTE என்று சொல்வார்கள்.(PEAR Shaped)பேரிக்காய் வடிவில் இருக்கும்.கூகுளில் சர்ச் பண்ணி பாருங்க.வெள்ளரிக்காயில் கூட்டு செய்வாங்க.இந்த ரெசிப்பி செய்ததில்லை.

வித்யா,
தேங்காய் அரைத்து சேர்த்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கண்டிப்பா செய்து பாருங்க.உங்க வாழ்த்துக்கு நன்றி.

கவிதா,
தேங்காய் அரைத்து சேர்ப்பதால் சுவை வித்தியாசமா இருக்கும்.உங்க வாழ்த்துக்கு நன்றி.

நான் இதை அதிகம் வாங்கி சமைத்தது இல்லை..
கண்டிப்பா வாங்கி செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்கள் சௌசௌ கிரேவி செய்தேன் சுவையாக இருந்தது நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.