கீமா குழம்பு

தேதி: August 9, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

கொத்துக்கறி.............300கிராம்
வெங்காயம்..............1
தக்காளி.................2
பச்சைமிளகாய்............2
மல்லி இலை.........சிறிது
கறிவேப்பிலை .......சிறிது
கல்பாசி இலை........சிறிது
இஞ்சிபூண்டுபேஸ்ட்........2தேக்கரண்டி
பட்டைகிராம்பு ஏலக்காய்த்தூள்............1/4தேக்கரண்டி
எண்ணெய்..............11/2குழிகரண்டி
மிளகாய்த்தூள்..........1தேக்கரண்டி
மட்டன்மசாலாதூள்............4தேக்கரண்டி

அரைக்க
தேங்காய்..............3துண்டு
கசகசா..............3தேக்கரண்டி


 

கறியை கழுவிவைக்கவும் வெங்காயம் தக்காளியை நறுக்கிவைக்கவும் மிளகாயைகீறிவைக்கவும்

அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும் (கசகசாவை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற விட்டு பின் அரைக்கவும்)

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டுசூடானதும் கல்பாசி இலை,கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி

அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,பட்டைகிராம்பு ஏலக்காய்த்தூள்சேர்த்து மிளகாய்த்தூள்,மட்டன்மசாலா தூள்சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி
கறி உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேகவிடவும்

வெந்ததும் அரைத்த தேங்காய்விழுது சேர்த்து மூடி 2விசில் விட்டு இறக்கவும்
இறக்கி மல்லி இலை சேர்த்து பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் டிஷ்.... இட்லிக்கும், பரொடாவுக்கும் நல்ல காம்பினெஷன்.....

ஃபாத்திமா..........கொத்துக்கறி எனறால் எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்ட்டம். எங்க அம்மாவின் கை மணத்தில் மணக்கும் கொத்துக்கறியை நினைக்கவைத்து கொஞ்சம் ஜொள்ளு விட வச்சுட்டீங்க போங்க. அப்படியே படங்களையும் போட்டிருந்தால் நிறைய ஜொள்ளு விட்டுருப்பேன்.ஹி.ஹிஹிஹி....... அருமையான சமையல். வாழ்த்துக்கள். கைமா என்று சொல்லுவாங்களே அதுவா இது.?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.