பருப்பு தக்காளி சட்னி

தேதி: June 16, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2
தக்காளி - 4
மிளகாய் வற்றல் - 10
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு


 

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் சிறிது நேரம் மூடிப்போட்டு வேகவிடவும். நன்கு ஆறிய பின் தேவையான உப்பு போட்டு அரைக்கவும்.
பின் கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்