ஆப்பிள் அல்வா

தேதி: August 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (11 votes)

 

ஆப்பிள் - ஒன்று
பால் - கால் லிட்டர்
முந்திரி
நெய் - 2 மேசைக்கரண்டி
கோதுமை மாவு - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 6 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்
கலர் [விரும்பினால்]


 

ஆப்பிளை விதை நீக்கி துண்டுகளாக்கி காய்ச்சிய பாலில் சேர்த்து மூடி வேக விடவும்.
வெந்த ஆப்பிளை பாலில் இருந்து எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டாம்.
கோதுமை மாவை கடாயில் வாசம் வர வறுக்கவும்.
இப்போது ஆப்பிள் வேக வைத்த பாலிலேயே அரைத்த விழுதை சேர்த்து கலந்து விடவும்.
இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டி ஆகாமல் கலக்கவும்.
இத்துடன் கலர் கலந்த நீர், சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது எடுக்கவும்.
சுவையான ஆப்பிள் அல்வா தயார்.

ஆப்பிளை தோல் நீக்கியும் செய்யலாம், தோலோடும் செய்யலாம். கலர் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தோலோடு இருந்தால் சிறு சிகப்பு புள்ளிகள் வைத்தது போல் பார்க்க அழகாகவே இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா... ரொம்ப சுலபமான ஆனா ஸ்பெஷலான ஒரு ரெசிபி குடுத்திருக்கீங்க... கடைசி படம் பார்க்கும்போதே சாப்பிட தூண்டுது... :)
வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

வனி சூப்பரா இருக்கு பா கோதுமைக்கு பதில் மைதா மாவு போடலாமா?
வித்யா நீங்க தமாமா? நான் தமாமில் அல்-ஜுபைலில் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க?

மைதா சேர்த்தும் செய்யலாம் என்று நினைக்கிறேன்... நான் மைதாவில் தனியாக அல்வா செய்து இருக்கிறேன்... வனிதா வந்து சொல்லட்டும்... நான் அல்-கோபாரில் வசிக்கிறேன்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் வனிதா....ஆப்பிள் அல்வா மணம் எங்க வீட்டுக்கே வந்திடுச்சு....... சுவையான சத்தான அல்வா கொடுத்த வனிக்கு வாழ்த்துக்கள்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஆஹா....

செம அல்வா....

செய்து பார்க்கிறேன் அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனி செம அல்வா சூப்பரா இருக்கு என்பேத்திவரவும் செய்து கொடுக்கனும் வாழ்த்துக்கள்

ஹாய் merzana அஸ்ஸலாமு அலைக்கும்.நீங்க தம்மாம்லய இருக்கீங்க, நானும் தம்மாம்ல தான் இருக்கேன், உங்களுககு merriage ஆயிடுச்ச

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யா... மிக்க நன்றிங்க. செய்து பாருங்க, கண்டிப்பா பிடிக்கும். :)

மெர்ஜானா... சேர்க்கலாம் ஆனா கொஞ்சம் கம்மு மாதிரி தன்மை கொடுக்கும். மற்றபடி சுவை நல்லா இருக்கும். செய்து பாருங்க. மிக்க நன்றி. :)

ப்ரியா அரசு... மிக்க நன்றி. செய்து பாருங்க... வாசம் மட்டுமில்லை, அல்வாவும் வீட்டுக்கு வந்துரும். ;)

ஆமினா... சமையல் கில்லாடி உங்ககிட்ட இருந்து வாழ்த்து... சந்தோஷம். அவசியம் செய்து பாருங்க. நன்றி. :)

பாத்திமா... ஏத்தி வராங்களா??? ஜமாயிங்க... வந்தா அறுசுவைக்கு வரவே நேரம் இருக்காது. செய்து கொடுத்து பேத்திக்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க. நன்றி :)

பசரியா... அரட்டை இழை தவிற வேறு எங்கும் அரட்டை கூடாதுன்னு சொல்லும் என் குறிப்பில் அரட்டையா??? ;( நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முகப்பில் பார்த்தவுடன் உங்களுடையது தான் என்று தெரிந்துக் கொண்டேன். சூப்பராக இருக்கு......கண்டிப்பாக அடுத்த முறை யாரையாவது விருந்துக்கு கூப்பிட்டால் இது தான் டெசர்ட். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அசத்தலான ஆப்பிள் அல்வா.. கோதுமை எல்லாம் போட்டு சத்தான குறிப்பா கொடுத்து இருக்கிங்க. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா மேடம்,

இப்போ தான் ஆப்பிள் வர ஆரம்பிக்குது.சீக்கிரம் செய்துவிட்டு சொல்கிறேன்.

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா... மிக்க நன்றி. கப்பை வைத்து கண்டுபிடிச்சுட்டீங்களோ!!! ;) செய்துட்டு ஃபீட் பேக் அவசியம் சொல்லணும்.

ரம்யா... குரு!! பின்ன.. இப்போ சமைக்க ஆரம்பிச்சு அறுசுவையயே ஒரு கலக்கு கலக்குறது நீங்க தான்!!! மிக்க நன்றி ரம்யா. :)

கவிதா... அங்க ஆப்பிள் கூட சீசனா??? நம்ம ஊரில் எப்பவும் எதாவது நாட்டில் இருந்து கொண்டு வந்துடறாங்க, வேக்ஸ் தடவிய ஆப்பிள் ;( சிரியாவோடு போனது சுவையான ஆப்பிள். மிக்க நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரமாதம் வனி, கோதுமை எல்லாம் செத்து வித்தியாசமா இருக்கு, கலர் பாத்தா கேரட் அல்வா மாதிரி இருக்கு. இந்த வாரமே பண்ணிடறேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Supera iruku ma valthukal

ஆப்பிள் அல்வா வித்தியாசமான குறிப்பு வனிதா.நன்றாக செய்திருக்கின்றீர்கள், பிரமாதமாய் இருக்கிறது.
ஈசியான செய்முறையாக இருக்கு செய்து பார்த்திட்டு சொல்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சுகி... மிக்க நன்றி. அவசியம் செய்ஹ்டு பாருங்க. சுவை எப்படி இருந்துதுன்னும் சொல்லுங்க. :)

ஜானு... மிக்க நன்றி :)

யோகராணி... சுலபம் தான் அவசியம் செய்துட்டு சொல்லுங்க. காத்திருக்கேன். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
இப்போதான் உங்க ஆப்பிள் அல்வா செய்து முடிச்சேன்.டேஸ்ட்டும் பண்ணியாச்சு.சூப்பர்.விருப்ப பட்டியலிலும் சேர்த்துட்டேன்.செய்துட்டு பின்னூட்டம் கொடுக்கணும்னுதான் நேற்று பதிவு போடல.முதன் முறையா,ஆப்பிளில் அல்வா செய்து இருக்கேன் உங்களால்.நல்ல குறிப்பு கொடுத்ததற்கு நன்றி.

சந்தேகம் கேட்டிருந்தீங்களே... என்னாச்சு??? நான் இப்ப தான் மெயில் பார்த்து ரிப்லை பண்ணேன்... ;( சரியா வந்ததா?!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
மெயில் பண்ணி இருக்கேன்,பாருங்க.

பார்த்தேன்... ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. அல்வா நல்லா வந்ததில் குஷி எனக்கு. மிக்க நன்றி ஹர்ஷா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா எப்படி இருகிங்க உங்களோட ஆப்பிள் அல்வா ரொம்பவும் நல்ல இருக்கு நாளைக்கே ட்ரை பண்ண போறேன். உங்களுடைய முட்டை ஓடு பைன்டிங்கள இருந்து குசன் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்தேனு. யு ஆர் ரேஅல்லி கிரேட்.

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து பின்னூடம் கொடுங்க. :)

//உங்களுடைய முட்டை ஓடு பைன்டிங்கள இருந்து குசன் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்தேனு// - கொஞ்சமாவது தேருச்சா? ;) மிக்க மகிழ்ச்சி தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆம் வனிதா இப்போ குசன் ட்ரை பண்ணிச்டு இருக்கேன். அதுவும் சதுரம் தான் வட்டம் இன்னும் ஸ்டார்ட் பன்னால பசங்க எப்படி இருகாங்க. நீங்க எங்க இருகிங்க. நான் லண்டனில் இருகிறேன். இப்போ மணி 10.10 ஆகுது.

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

ஹாய் வனி ஆப்பிள் தனியா கொடுத்தால் என் பையன் சாப்ட மாட்டான் இப்படி செய்து கொடுக்குறேன்.சூப்பரா செய்து இருக்கீங்க ,வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வாவ் செம்ம டேஸ்ட்,இன்னும் இனிக்குது :) வனி நேத்தே செய்துட்டேன்..தோலோட தான் செய்தேன்...இனிமேல் யாரவது வந்தால் உடனே ஆப்பிள் அல்வா தான் எங்க வீட்ல..ரொம்ப நன்றி வனி...கலக்குங்க!!!

apple halwa super.nan apple vega vaikum pothu milk thirinchu poguthu.milk thiriama iruka enna pannanumnu sollungalen pl..................

மன்னிக்கவும் சில நாட்களாக அறுசுவை பார்வையிடவில்லை. இது போல் எனக்கு இதுவரை ஆனதில்லை.... ஆனால் ஹர்ஷாக்கு ஆனதாக சொன்னார். அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை, தானாகவே அடுத்த முறை நன்றாக வந்தது என்று சொன்னார். உங்களூக்கும் இதே போல் ஆனது என்பது வருத்தமாக இருக்கு. மன்னியுங்கள் தோழி. பாலை நன்றாக காய்ச்சிவிட்டு பின் பழம் சேர்த்திருந்தால், பாலை சூட ஆர விட்டு சேர்த்து பாருங்கள்... இல்லை இம்முறை சூடு இல்லாமல் தான் சேர்த்தீர்கள் என்றால் சூடாக இருக்கும்போதே பழம் சேர்த்துப்பாருங்கள். எனக்கு தெரிந்து பால் கெட இதை தவிற வேறு காரணம் இருக்காது. சிறிது அளவே முயற்சி செய்து பாருங்கள். அவசியம் எப்படி வந்தது என்று சொல்லுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க எப்படி வந்ததுன்னு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. சரியா வந்துதா... நிம்மதியா இருக்கு :) பின்னூட்டம் படிச்சதும் மகிழ்ச்சியா இருக்கு தீபா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dear madam
kaichiya palil apple pottom endral pal thirinthu vidukirathu ena en tholi pala murail kooriyullal. ethanal appadi ena kooravum

muyarchi sei , valvil munneru nermaiyana vazhiyil, lanjathirku NO sollu

அன்பு தோழி... இதே பிரெச்சனையை பலரும் சொல்லி இருப்பது வருத்தமாகவே உள்லது. மன்னிக்க வேண்டும் தோழி. நான் இன்னுமே விளக்கம் நன்றாக கொடுத்திருக்கலாம். பால் சூடு ஆரியதும் ஆப்பிள் சேர்த்து வேக விடுங்கள். சூடாக இருக்கும் பாலில் எதை சேர்த்தாலும் பால் கெடும். முயற்சி செய்து பார்த்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி மேடம், நான் அருசுவைக்கு புதிது.உங்கள் ஆப்பிள் அல்வா செய்தேன்.மிக்க நன்றாக இருந்தது.மிக்க நன்றி

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Halwa is super mam

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா