முளைக்கீரை கூட்டு

தேதி: August 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கீரை...........1கட்டு
சின்ன வெங்காயம்........15 எண்ணிக்கை
துவரம் பருப்பு..........100கிராம்
கடுகு,உளுந்து தலா.......1டீஸ்பூன்
கறிவேப்பிலை.....சிறிது
பட்டைவத்தல்..........2
உப்பு........தேவைக்கு
எண்ணெய்.......2டீஸ்பூன்
மஞ்சள்தூள்..........1/4டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்...........1துண்டு
சீரகம்............2டீஸ்பூன்
பச்சை மிளகாய்..........1


 

கீரையை சுத்தம் செய்து நறுக்கி கழுவிவைக்கவும் வெங்காயத்தை தோல் எடுத்து நறுக்கிவைக்கவும் குக்கரில் பருப்பு மஞ்சள்தூள்சேர்த்து 2விசில் விட்டு இறக்கவும்

அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும்

அடுப்பில் கடாயைவைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை வத்தல் போட்டுதாளித்து வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும்
வதக்கியதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வேகவிடவும்

கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பு உப்பு சேர்த்து ஒரு கொதி வரவும் இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்