நெத்திலி மொச்சை குழம்பு

தேதி: August 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

மொச்சை - 100 கிராம்
கத்திரிக்காய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மாங்காய் - இரண்டு துண்டுகள்
பச்சைமிளகாய் - ஒன்று
புளி - சிறிது
பூண்டு - 5 பல்
நெத்திலி கருவாடு - தேவையான அளவு
மல்லிப் பொடி - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு
கறிவேப்பிலை
எண்ணெய்


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
முதலில் மொச்சையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து நீரை வடித்து விட்டு மொச்சையை தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் கத்திரிகாயை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி மல்லி, மிளகாய் சிறிது வெங்காயம், பின் மஞ்சள் பொடிகளை அதில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து கரைத்துக் கொள்ளவும். பூண்டையும் தோலுரித்து அதில் சேர்க்கவும்.
அதை அப்படியே ஒரு வெறும் வாணலியில் ஊற்றி அதில் மாங்காய், கத்திரி சேர்த்து நெத்திலி கருவாடும் சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.
காய்கள் முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த மொச்சையையும் அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பின் வேறு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் குழம்பை ஊற்றவும்.
சுவையான நெத்திலி மொச்சை குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ருக்சனா , சூப்பரா பண்ணி இருக்கீங்க, இது புளி குழம்பா? கலர் பாத்தா அப்படி இருக்கு,ஆனா புளி கம்மியா தான் சேத்தி இருக்கீங்க.வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் ருக்சானா, சூப்பரான குழம்பு எனக்கு இப்போவே சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்;)))

உன்னை போல பிறரையும் நேசி.

நீங்க கத்தரிக்காய் கட் பண்ணி இருக்கிற அழகே அழகுதான் உங்க குழம்பு வாசனை இங்க வந்துடுச்சு ருக்ஸ் அக்கா .நல்ல இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

மசாலாவ அம்மில அரச்சு, மண்சட்டில அம்மம்மா செஞ்சு கொடுப்பாங்க. அதே மாதிரியான குறிப்பு

வாழ்த்துக்கள் ருக்ஸானா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இது பச்சை மொச்சையில் செய்யலாமா? குழம்பு சூப்பராக இருக்கிறது. அதுவும் நீங்கள் சட்டியை காட்டி வேறு என் நாவில் எச்சில் ஊரவேச்சிட்டீங்க....எனக்கு அந்த கடைசி படத்தில் உள்ளதை மட்டும் அப்படியே பார்சல் பண்ணுங்க பார்க்கலாம் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!