சப்பாத்தி குருமா | arusuvai


சப்பாத்தி குருமா

வழங்கியவர் : kumari.r
தேதி : வெள்ளி, 12/08/2011 - 16:57
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3.903225
31 votes
Your rating: None

 

 • பெரிய வெங்காயம் - ஒன்று
 • தக்காளி - ஒன்று
 • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 • உப்பு - தேவைக்கு ஏற்ப
 • கேரட் - 100 கிராம்
 • பீன்ஸ் - 100 கிராம்
 • உருளை - ஒன்று
 • தாளிக்க:
 • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
 • பட்டை, கிராம்பு, லவங்கம் - தலா ஒன்று
 • கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு
 • அரைக்க:
 • தேங்காய் - அரை மூடி
 • பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
 • பூண்டு - 5 பல்
 • இஞ்சி - ஒரு அங்குல துண்டு

 

அரைக்க கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, மற்ற காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போனதும் காய்களை சேர்க்கவும்.

இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாக மூடி வேக வைக்கவும். குருமா சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூடான சப்பாத்திக்கு குருமா ரெடி.

தேங்காய் விரும்பாதவர்கள் அதற்கு பதில் இறுதியில் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.


குமாரி

எங்க வீட்டுல பண்ற மாதிரி பண்ணி இருக்கீங்க,
கைவசம் நிறைய குறிப்பு வெச்சு இருக்கீங்க போல!! வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குமாரி

ஹாய் குமாரி, அசத்துரிங்க போங்க;) வேர என்ன சொல்ல வாழ்த்துக்கள்;))

உன்னை போல பிறரையும் நேசி.

குமாரி அக்கா

குமாரி அக்கா கலர் ஃபுல்லா சூப்பரா இருக்கு

KEEP SMILING ALWAYS :-)

Kumari akka

Kalarful kuruma seithuttu varen

Kumari akka

Kalarful kuruma seithuttu varen

குமாரி...

குமாரி... குருமா அருமையா இருக்கு... இட்லி, தோசைக்கு கூட நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

குமாரி அக்கா

நல்லா இருக்கு குமாரி அக்கா செய்து பார்த்துட்டு சொல்லுறேன் வாழ்த்துக்கள் by Elaya.G

குமாரி

நல்ல குறிப்பு குமாரி

படங்களும் அருமை

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குமாரி

சுவையான குறிப்பு. இன்னும் ஒரு 10 நாள் கழித்து செய்துட்டு வரேன் :) சூப்பரா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குமாரி,

குமாரி,
குர்மா நல்லா செய்து இருக்கீங்க.படங்களும் சூப்பர்.கண்டிப்பா செய்துட்டு பதிவு போடுறேன்.வாழ்த்துக்கள்.