மினி இட்லி சாம்பார்

தேதி: August 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (18 votes)

 

துவரம்பருப்பு - 150 கிராம்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கத்திரிக்காய் - ஒன்று
கேரட் - ஒன்று
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 6
தாளிக்க :
வரமிளகாய் - 4
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கு


 

சின்ன வெங்காயத்தை முழுசாக உரித்து வைக்கவும். தக்காளி மற்றும் கேரட்டை சிறு சிறு துண்டாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி வைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பருப்பை அலசி விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாயை கிள்ளி போட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கேரட், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து கத்திரிக்காய் சேர்த்து லேசாக வதக்கவும்.
வதக்கிய காய்களை வேக வைத்திருக்கும் பருப்பில் சேர்த்து மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி மேலே மல்லித்தழை தூவவும்.
ஒரு கப்பில் மினி இட்லியை போட்டு மூழ்கும் அளவு சாம்பாரை ஊற்றி மேலே 2 தேக்கரண்டி நெய் விட்டு சாப்பிடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஸ்வர், மினி இட்லி சாம்பார் பிரமாதமா இருக்கு. அப்படியே எனக்கு கொடுத்துடுங்க சாப்பிட்டு விட்டு எப்படி இருக்குனு சொல்லுரேன்;)))) இன்னும் நிறைய குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள் ஸ்வர்.;))

உன்னை போல பிறரையும் நேசி.

கலகிட்டிங்க போங்க பார்க்கவே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு குட்டி இட்லி சூப்பர். நீங்க கத்தரிக்காய் கட் பண்ணி போட்டு இருக்கது கொய்யா மாதிரி தெரிது அக்கா வாழ்த்துக்கள் by Elaya.G

மினி இட்லி சூப்பர் . ஆனா சிங்கள மொழில இருக்ரதள புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கு ...............

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

ஸ்வர் பார்க்கவே சாப்பிடனும்பு ஆசைய தூண்டுதுபா. சூப்பரா செய்து இருக்கீங்க. இட்லி சாம்பாரே ரொம்ப பிடிக்கும் அதிலும் மினி இட்லி கூட சாம்பார் ம் ம். தொடர்ந்து நிறைய குறிப்புக் கொடுக்க வாழ்த்துக்கள் ஸ்வர்.

ஸ்வர்ணா... ரொம்ப சூப்பர்... சீக்கிரமா செய்துடலாம் போல இருக்கே இந்த சாம்பார்... இட்லியோட இருக்கற படம் அருமை... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

your recipe and photos are very nice.photos are very colorful.keep it up. i will try your previous recipe banana pottimass it came out very well.thank you. regards.g.gomathi.

மினி இட்லி சாம்பார் பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு. எனக்கும், பாப்பாவுக்கும் ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா செய்து பார்த்துட்டு பதில் போடுறேன். குறிப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி

senbagababu

கலக்குறீங்க

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹலோ ஆமினா எப்படி இருக்கிங்க நான் கேட்டதுக்கு யாரும் பதில் சொல்ல வில்லை. நீங்களாவது சொல்லுங்க.இந்த ரெசிப்பி சிங்கள மொழில இருக்கு எப்படி மாத்துறது.ஈத் முபாரக் ..................

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

பர்வீன்

என்ன சொல்றீங்கன்னு புரியல... எது சிங்கள மொழிக்கு மாத்தணும்?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமாம் எனுக்கு செய்முறை எல்லாம் சிங்கலதில்இருக்கிறது, மற்றவை எல்லாம் தமிழில் உள்ளது. சாரி சாகருக்கு சமசுக்டு இருந்தேன் அதான் லெட்ட ரிப்லி பண்றேன் ...........

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

இந்த பக்கத்தின் கீழே வலபுற ஓரத்தில் தொடர்புக்கு என்ற லிங்கின் வழியாக உங்களோட பிரச்சனைய சொன்னா அவங்க தீர்வு சொல்லுவாங்க பர்வீன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தேங்க்ஸ் ஆமின. நீங்க தூங்கலைய. எங்க இருகிங்க. நோன்பு எப்படி போய்கொண்டு இருக்கு. நீங்க நோன்பா.

ALWAYS BE ACTIVE. NOTHING IS IMPOSSIBLE TO DO, SO BE CONFIDENT IN YOUR LIFE.

கண்டிப்பா இந்தியா இட்லியை மிஸ் பண்ணிட்டு தான் இருக்கேன். பார்த்தாலே சாப்பிட தூண்டுது.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஸ்வர்ணா,
சாம்பார் செய்முறை சூப்பர்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.படங்களும் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

இந்தியாவில் இருக்கும் போது சரவணா பவன் போனால் கண்டிப்பாக இதை சாப்பிடாம வரவே மாட்டேன்....அதே மாதிரி இங்கே எப்போ இந்தியன் ரெஸ்டாரண்ட் போனாலும் என் குழந்தைகள் விரும்பிய சாப்பிடும் மெனு தான் உங்க ரெசிபி. பார்க்கவே யம்மியா இருக்கு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு மிக்க நன்றி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி உனக்கு இல்லாததா நீ இங்கு வா நான் சூடாவே செய்து தரேன் :)
முதலாய் வந்து வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி தேவி :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பர்வீன் மிக்க நன்றி.ஆனால் நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியல? உங்களுக்கு browser formate தப்பா இருக்குன்னு நினைக்கிறேன் அதான் அப்படி தெரியுது :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆமினா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரம்ஸ் வாழ்த்துக்கு மிக்க நன்றிப்பா. இந்தியா ஞாபகம் வர வச்சிட்டேனா??

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு மிக்க நன்றிப்பா.கண்டிப்பா செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்க எல்லோருக்கும் ஃபேவரைட் மெனுவா சந்தோசம்,உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி லாவண்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழி எப்படிம்மா இருக்க? எங்க சாட்டுக்கு வரக்கூடாதுன்னு முடிவு பன்னிட்டியாப்பா? ஒரு ஹாயாவது சொல்லிட்டு போகலாம்ல :(

வாழ்த்துக்கு மிக்க நன்றி யாழி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வித்யா ஆமாம் சாம்பார் செய்வது மிக எளிதுதான் :) வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கோமதி மிக்க நன்றி, வாழைக்காய் பொடிமாஸ் செய்து பார்த்தாச்சா உங்களுக்கு பிடிச்சுருந்ததில் மிக்க மகிழ்ச்சி..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அண்ணி உங்களுக்கும்,நவீனா குட்டிக்கும் பிடிக்குமா சந்தோசம் அப்ப கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க...மிக்க நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா முதல் படம் சூப்பரா இருக்கு, மினி இட்லி சாம்பார் அருமையான வரும் என்று நினைக்கிறேன் செய்து பார்த்துட்டு சொல்றேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஸ்வர் சம சூப்பரா யம்மியா இருக்கு மினி இட்லி. படங்களுக்கு தெளிவா இருக்கு. மினி இட்லி தட்டு இல்ல ஸ்வர் வாங்கிதான் தான் செய்யனும் விருப்பபட்டியலில் இருக்கு. சீக்கிரம் செய்து பார்த்துடுறேன்.

சுவா,படங்கள் மிகவும் நேர்த்தி. அதைவிட அதில் அரிந்து வைத்துள்ள காய்கறிகள் நேர்த்தியோ நேர்த்தி. சாம்பார் வாசனை குடந்தையையும் தாண்டி காங்கோவுக்கே வந்துடிச்சி. கடைசியா பார்த்தா அது நம்ம சுவாவோட சாம்பார் தானா? தெரிஞ்சிருந்தா இங்கேயே ஒரு பாத்திரத்துல பிடிச்சு அடைச்சு வச்சிருப்பேன். இட்லியும், தோசையும் நாள் முழுக்க தந்தாலும் அலுக்காம சாப்ப்டுவேன் சுவா. அதுவும் சாம்பாரோடனா கேக்கவே வேணாம். சுவா, ஒரு டசன் மினி இட்லி காங்கோவுக்கு பார்சல் :) வாழ்த்துக்கள் சுவா. ஊருக்கு வரும்போது ஒரு லிஸ்டோட வருவேன். வேற வழியே இல்ல. நீங்க செய்து தந்தே ஆகனும் :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஸ்வர்ணா,
உங்களது மினி இட்லி செய்து விட்டேன்..ரொம்ப நன்றாக இருக்கிறது...
நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

குமாரி மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி மிக்க நன்றி.செய்து பார்த்தாச்சா ரொம்ப சந்தோசம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வினோ நன்றிப்பா,கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்ப்ஸ் மிக்க நன்றிப்பா:) போட்டோஸ்லாம் நான் எடுத்ததுதான் :)
சாம்பார் உங்களுக்கும் பிடிக்குமா அப்ப கண்டிப்பா பார்சல் பண்னிடுறேன்,நீங்க இங்க வாங்க கண்டிப்பா எல்லாமே செய்து தரேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நீங்க சேர்த்த காய் கலர் காம்பினேஷன்க்கே செய்து சாப்பிடனும் போலிருக்கு. எனக்கு பொதுவாவே மினி இட்லி சாம்பாரோடு ரொம்ப விருப்பம். அப்படியே ஹோட்டல்ல கிடைப்பது போல் நீங்க செய்திருப்பது சூப்பர்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மிக்க நன்றி கண்டிப்பா செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா.... உங்க சாம்பார் செய்து சாப்பிட்டாச்சு... மினி இட்லி ப்ளேட் இல்ல... அதனால நார்மல் இட்லி தான் செய்தேன்... ஆனா சாம்பார் அருமையான சுவை... கத்தரிகாய் இல்லை... சோ அது இல்லாம பண்ணினேன்.... நன்றி.... :)

வித்யா பிரவீன்குமார்... :)

வித்யா செய்து பார்த்தாச்சா சந்தோசம், உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி, நன்றி.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

super sister sambar try pannren nangalum ithula eppadi kuripu podurathunu solugale

ரஷீனா நீங்க உங்க குறிப்புகளை பிழையில்லாமல் தெளிவாக எழுதி புகைப்படத்தோட இந்த முகவரிக்கு அனுப்புங்க.

arusuvaiadmin@gmail.com

ரஷீனா உங்க பதிவுகளை தமிழில் போட முயர்ச்சியுங்கள்,இதே பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவின்னு இருக்கு பாருங்க அதை க்ளிக் பண்ணி அதில் டைப் பன்னுங்க அதை அப்படியே இங்க காபி பேஸ்ட் பன்னுங்க இல்லன்னா nhm writter இன்ஸ்டால் பண்ணியும் தமிழில் எழுதலாம்.
இது முழுக்க தமிழ் தளம் ஆகையால்தான் சொன்னேன் தவறாக நினைக்கவேண்டாம் ரஷீனா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நன்றி ஸ்வர்னா அக்கா