வாழைக்காய் மசாலா

தேதி: August 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

வாழைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் துண்டு - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை வத்தல் - 3
பூண்டு - 2 பல்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாழைக்காயை சிறு துண்டாக நறுக்கவும்.
தேங்காய், சீரகம், பட்டைவத்தல், பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய வாழைக்காய், மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு கிளறி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
காய் வெந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான வாழைக்காய் மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க வாழைக்காய் மசாலா செம்ம சூபர் போங்க...இன்னிக்கே செய்துட்டு சொல்றேன்...எங்க வீட்ல கூட வாழக்காய் வச்சு வாழை பழம் ஆஹிவிடும்...இனிமேல் அந்த கவலை இல்லை :)

அம்மா உங்க வாழைக்காய் மசாலா சூப்பர்... இந்த ரெசிபியதா நா எதிர்பார்த்தேன். ரொம்ப நன்றி பாத்திமாம்மா :)

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் பாத்திமா வாழைக்காய் பொரியல் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சூப்பரான வெஜ் குறிப்பு.. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா அம்மா,
வாழைக்காய் மசாலா இப்போதான் கேள்விபடுறேன்.செய்முறை வித்தியாசமா,புதுமையா இருக்கு.கண்டிப்பா உங்க முறையில் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

பாத்திமா அம்மா,

வாழைக்காய் மசாலா அருமை..செய்துவிட்டு சொல்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தோழி வாழக்கா மசலா நல்ல இருக்கு

Jaleelakamal

அன்பு ஃபாத்திமா,

அடிக்கடி செய்யத் தூண்டும், சிம்பிளான சுவையான குறிப்பு.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

பாத்திமா வழைக்காய் மசாலா மிக அருமை..... வாழ்த்துக்கள்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பைவெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

இனி பழுக்காதுன்னு நினைக்கிறேன் வருகைக்கு மிக்க நன்றி

எதிர் பார்த்தது கிடைச்சுதா? இனி செய்துட்டு சொல்லனும் சரியா வருகைக்கு மிக்க நன்றி

குமாரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செய்துட்டு சொல்லுங்கள் நன்றி

அன்பு செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கவி சீக்கிரம் சொல்லுங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

தோழி வருகைக்கு நன்றி

சீதா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி (இந்தியா வந்தாச்சா)

ஸ்வர்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Hi Fathima,
Naan Arusuvai'ku pudhusu. unga valakkaai masala innki pannaen. roumba super'a irundhuchu. different'a irundhuchu. ivaruku roumba pidichurundhuchu. Thanks for you recipe. :)

பாத்திம்மா உங்க வாழைக்காய் மசாலா நேற்று செய்தேன். நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி