சாக்லேட் கேக்

தேதி: August 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (12 votes)

 

கேக் செய்ய:
மைதா - 1 3/4 கப்
கோகோ பவுடர் - 3/4 கப்
சர்க்கரை - 2 கப்
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
முட்டை - 2
வெஜிடபிள் ஆயில் - அரை கப்
பால் - ஒரு கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
சுடு நீர் - ஒரு கப்
சாக்லேட் ஃப்ராஸ்ட்டிங்(Frosting) செய்ய:
கோகோ பவுடர் - 2/3 கப்
பவுடர்ட் சுகர் - 3 கப்
வெண்ணெய் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
பால் - 1/3 கப்


 

கேக் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
கேக் செய்ய தேவையான (dry ingredients) மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை, வெஜிடபிள் ஆயில், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து கலக்கவும். இப்போது கொதிக்கும் சுடு நீர் சேர்த்து கொள்ளவும். கலவை தோசை மாவு பதத்தில்(நீர்க்க) இருக்க வேண்டும். கேக் கலவை தயார்.
கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி, மைதா தூவி வைக்கவும். இந்த கேக் கலவையை, இரண்டு கேக் ட்ரேகளில் ஊற்றவும்.
அவனை 350 டிகிரி F க்கு முற்சூடு செய்யவும். பின்னர் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கின் மையத்தில் குத்தினால் டூத் பிக் கிளீனாக வர வேண்டும்.
பின் 10 நிமிடங்கள் கழித்து ட்ரேயிலிருந்து கேக்கை மெதுவாக வேறு ப்ளேட்டுக்கு மாற்றவும். இதை அப்படியே சர்வ் பண்ணலாம். விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்து சர்வ் பண்ணலாம்.
சாக்லேட் ஃப்ராஸ்ட்டிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெண்ணெயை உருக்கி ஊற்றிக் கொள்ளவும்.
இதனுடன் பவுடர்ட் சுகர், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு க்ரீம் பதத்தில் கலக்கவும். ஃப்ராஸ்டிங் செய்ய கேக் நன்கு ஆறி இருக்க வேண்டும்.
ஒரு ப்ளேட் அல்லது மைக்ரோவேவ் டர்ன்டேபிளில் ஃபாயில் பேப்பர் கொண்டு கவர் செய்து, அதில் கேக்கை வைத்து க்ரீம் பூசவும். அதன் மீது இன்னொரு கேக்கை வைத்து மீதியுள்ள க்ரீமை பூசவும். பக்க வாட்டிலும் க்ரீம் பூசவும்.
பின்னர் கேக்கை விரும்பியவாறு அலங்கரித்து, கட் பண்ணலாம்.
பரிமாறும் போது கேக்கின் மேலே செர்ரி அல்லது வெனிலா ப்ராஸ்டிங் வைத்து பரிமாறலாம். சுவையான டபுள் லேயர்ட் சாக்லேட் கேக்(double layered chocolate cake) தயார்.

இந்த சாக்லேட் கேக் ரெசிப்பி, ஹெர்ஷி'ஸ்(Hershey's) கோகோ பவுடர் டின்னில் உள்ளது. இம்முறையில் செய்யும் சாக்லேட் கேக் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும். செய்வதும் சுலபம். ஃப்ராஸ்டிங் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும். விரும்பினால் அதையும் உபயோகிக்கலாம். சாக்லேட் ஃப்ராஸ்டிங்கிற்கு பதில் வெனிலா ஃப்ராஸ்டிங்கும் உபயோகப்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்......எனக்கு அப்படியே பார்சல் பண்ணுங்க பார்ப்போம்.....யம் யம் யம்......
ஃப்ராஸ்டிங் எல்லாம் செய்து கலக்கிருக்கீங்க.....ரொம்ப அருமையாக இருக்கு....வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு கேக் சூப்பரா இருக்கு பார்க்கவே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

:) எனக்கு சாக்லேட் கேக் ரொம்ம்ம்ம்ம்பபபபப பிடிக்கும். அக்டோபர்ல எங்க வீட்டு குட்டி இளவரசிக்கு முதல் பர்த்டே வருது. நிறைய கேக் ரெசிபி பார்த்தேன். எதுவுமே பிடிக்கல. இந்த கேக்தா செய்யப்போறேன். ஏழாவது படத்துல இருக்குற கேக் sooo yummy :) thanks anbu

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் அன்பு சூப்பர் நானும் இன்னைக்கு சாக்லேட் கேக் தான் செய்ய போறேன்.உங்கள் முறைபப்டி செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹர்ஷா சூப்பரா செஞ்சு இருக்கீங்க சாக்லேட் கேக். விருப்பட்டியலில் இருக்கு. இந்த கேக் குறிப்பு கொடுத்தற்கு நன்றி. இன்னும் நிறைய புது ரெசிப்பிகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

கேக்க்கா செஞ்சு கலக்குறீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாவ்.. க்ரேட்.. யம்மி யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ;)
நான் அங்கே வந்தா சொல்லவே வேணாம் இந்த கேக்கை செய்து ஃப்ரிட்ஜில் வெச்சுடுங்க. ஜில்லுனு சாப்பிட சூப்பரா இருக்கும்.. அழகா இருக்கு கடைசி படத்தில் நீங்க கட் செய்து வைத்திருப்பது. எடுத்துக்கோனு சொல்லுது ;(
கலக்ஸ்..வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு, சாக்லெட் கேக் பார்க்கும் போதே ஜொள் ஊத்துது பா. என்ன பண்ண? இப்போதைக்கு லேப்பிய தான் நனைக்க முடியும். இன்னைக்கு தான் உங்க ரவா லட்டு ரெசிப்பி பண்ணேன் பா. ரொம்ப நல்லா வந்தது. உங்களுக்கு சாம்பிள் அனுப்பலாம்னு திரும்பி பார்த்தா தட்டே காலியா இருந்தது. அதனால அடுத்த முறை செய்யும் போது கண்டிப்பா அனுப்பறேன் அன்பு.(எப்படியெல்லாம் டகாய்க்க வேண்டியிருக்கு பாருங்க ;)) நமக்கு ஆர்டினரி கேக்கே மண்டை காயும். நீங்க சாக்லெட் கேக் எல்லாம் செய்து அசத்தறீங்க அன்பு. வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

லாவண்யா,
முதலாவதாக பதிவிட்டு சந்தோஷப்படுத்திட்டீங்க.ரொம்ப நன்றி.பார்சல் எதற்கு?வீட்டுக்கு வாங்க,செய்து கொடுக்குறேன்.உங்க அளவுக்கு செய்ய முடியலனாலும் ஓரளவு ட்ரை பண்ணேன். ;-) வாழ்த்துக்கு நன்றி.

ஸ்வர்ணா,
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.

அன்பரசி எப்படியிருக்கீங்க? குழந்தைகள் நலமா?
நான் பொதுவா கேக் போன்ற உணவுகள் பக்கம் திரும்பவே மாட்டேன். எப்போவாவது ரொம்ப கம்பல் பண்ணா ஒரு கடி அவ்வளோதான். ஆனால் வீட்டில ட்ரை பண்ண ஆசையாய் இருக்கும்... பார்டிக்கு முன் செய்து பழகினால் பிறகு யூஸ் ஆகுன்னு ரொம்ப நினைப்பேன்... ஆனால் எத்தனை முறை செய்து என்ன பண்றது!!!
உங்க முறையில செய்து பார்க்க தோணுது... அப்புறம் இதுல முட்டை வாசனை வருமா... முட்டை இல்லாமல் செய்யலாமா?
எப்படியாவது முதல் முறை செய்து பார்க்க தோணுது....... கண்டிப்பாக டைம் இருக்கும் பொது செய்றேன்.

நாகா,
உங்க வீட்டு குட்டி இளவரசிக்கு என்னோட அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சாக்லேட் கேக் கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.சுலபமா தான் இருக்கும்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

குமாரி,
சாக்லேட் கேக் செய்யபோறிங்களா?இம்முறை ஈசிதான்.கண்டிப்பா உங்க குட்டீஸ்க்கும் பிடிக்கும்.பதிவுக்கு நன்றி.

வினோஜா,
நீங்க கேட்டதால் தான் இந்த கேக் ட்ரை பண்ணேன்.நல்லா வந்தது.நீங்களும் செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

ஆமி,
கலக்கி(மிக்ஸ் பண்ணி)தான் கேக் செய்து இருக்கேன்,பாருங்க. ;-)

ரம்ஸ்,
கடைசி ஃபோட்டோவில் உள்ளது மட்டுமல்ல,முழு கேக்கும் உங்களுக்குதான்.எப்போ வருவீங்கனு சொல்லுங்க.கேக் செய்து வச்சு காத்திருப்பேன்.;-) பதிவுக்கு மிக்க நன்றி.

கல்ப்ஸ்,
எப்படி இருக்கீங்க?காங்கோ ரவாலட்டா?சாம்ப்பிள் எல்லாம் வேண்டாம்.செய்துட்டேன்னு நீங்க சொன்னதே போதும்.ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.காங்கோ ஜூஸ் செய்ற உங்களுக்கு சாக்லேட் கேக் எல்லாம் ஜுஜுபிதான்.கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

உமா,
நானும் குட்டீஸும் நலம்.உங்க செல்ல மகன்கள் நலமா?

சாக்லேட் கேக்கில் எக் சேர்த்து செய்வது ரொம்ப ஈசி.முட்டை வாசம் வராது.வெனிலா எசன்ஸ் மற்றும் கோகோ பவுடர் சேர்ப்பதால் முட்டை வாசம் அடங்கிவிடும்.முதலில் முயற்சி செய்யும் போது கொஞ்சமா செய்து பாருங்க.நல்லா வந்தால் அதிக அளவில் செய்யலாம்.சரியா வரலனாலும் கொஞ்சம் தானேனு தூக்கி போட்டுடலாம்.

இந்த செய்முறை நான் முதல்முறையா ட்ரை பண்ணபோதே நல்லா வந்தது.அவ்வளவு ஈசி.செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

அன்பரசி,

யம்மி கேக்..

வாழ்த்துக்கள் !!!

என்றும் அன்புடன்,
கவிதா

விருப்ப பட்டியலில் சேர்த்துவிட்டு தான் உங்களுக்கு பதிவு செய்கிறேன். பார்க்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

பிரமாதமான கேக் ஆனால் என்னிடம் ஓவன் இல்லை வாழ்த்துக்கள் மா.

ஒரு வார்த்தை கவிதை "நீ"

அச்சச்சோ இப்பதான் டயட் இருக்கிறதுன்னு முடிவு பண்ணி இரண்டு நாள் சூப் செஞ்சு குடிச்சுட்டு இருக்கேன்;) சாக்லேட் கேக்க காமிச்சு இப்படி கவுத்தி விட்டுடீங்களே;))

Don't Worry Be Happy.

அன்பரசி சூப்பர் சூப்பர் சூப்பர். பார்த்தவுடனே எடுத்து சாப்பிடனும் போல இருக்குப்பா. யம்மிமிமிமிமிமிமி, அதுவும் அந்த சாக்லேட் கேக்ல வெனிலா ப்ராஸ்ட்டிங் வச்சிருக்கிறது பார்க்கவே யம்மியா இருக்கு நான் அப்படியே சாப்பிடுவேன்

I saw your chocolate cake it was very nice to eat and also to see.and thanks for seeing my comment.

கவிதா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ஷங்கரி,
விருப்ப பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி.கண்டிப்பா செய்து பாருங்க.

லக்ஷ்மிகலா,
உங்க பதிவுக்கு நன்றி.சீக்கிரமே ஓவன் வாங்க வாழ்த்துக்கள்.(ஓவன் வாங்கியதும் கேக் செய்துட்டு சொல்லுங்க.)

ஜெய்,
எப்படி இருக்கீங்க?சந்தோஷமா சாக்லேட் கேக் செய்து சாப்பிட்டுட்டு,டயட்டை கன்ட்டினியூ பண்ணுங்க,சரியா? ;-)

யாழினி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா செய்து சாப்பிடுங்க.இங்கு வந்தால் நானே செய்து தரேன். ;-)

ரவீந்திரன்மலர்விழி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.நீங்க என் குறிப்பை பார்வையிட்டு,பதிவு போட்டதற்கு,நான் தாங்க நன்றி சொல்லணும். :-)

அன்பு அன்பரசி,

அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு:) குறிப்பும் அருமை, படங்களும் விளக்கங்களும், வழக்கம் போலவே தெளிவாக, அழகாக இருக்கு.

பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கேக் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாழ்த்துக்கள்

ஸ்டார் குடுத்து ரெண்டு நாள் ஆச்சு, பதிவு போட தான் முடியல. மன்னிக்கணும்.
சொல்ல வார்த்தை இல்ல, பாத்ததுல இருந்தது, எப்ப பண்ண போறோம்ன்னு இருக்கு. சூப்பர் சூப்பர் சூப்பர்!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சீதாலக்ஷ்மி அம்மா,
//அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு:)//
நீங்க இங்கு வரும்போது கண்டிப்பா செய்து தரேன்.உங்க பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

ஃபாத்திமா அம்மா,
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

சுகி,
லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்ட்டா போட்டு இருக்கீங்க.மிக்க நன்றி.சீக்கிரம் செய்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க.உங்க 5 ஸ்டாருக்கும் மிக்க நன்றி,சுகி.

பார்சல் ப்ளீஸ்... நான் இங்க செய்ய முடியாதே... இதை செய்வதற்காக மாலே போனும் போலிருக்கே ;) சூப்பரா இருக்கு ஹர்ஷா!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
பார்சல்தானே கண்டிப்பா அனுப்புறேன்.உங்க பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

சாக்லேட் கேக் அழகாக இருக்கு.

நானும் மகனும் அப்பபோ கேக் செய்து கொஞ்சம் தின்னுட்டு மீதியை குப்பையில் போடுவோம்... ஆனாலும் அடுத்த முரை செய்யாமல் இருப்பதில்லை...

இன்று உங்கள் முறையில் செய்யப் போகிறேன்... ஹி ஹி ஹி.. நல்லா வந்திடும்னு நினைக்கிறேன்...

வரலன்னாலும் ovenத் திட்டிக்குவேன்... ஆடத் தெரியாதவ மேடைக் கோணல்னாளாம்....

தேன்மொழி,
சாக்லேட் கேக் செய்துட்டீங்களா?
எப்படி வந்தது?
வந்து சொல்லுங்க.

வெஜிடபிள் ஆயில் எதுப்பா?