வால்நட் டேட்ஸ் சட்னி

தேதி: August 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

வால்நட் - 4
டேட்ஸ் - 100 கிராம்
மிண்ட் (புதினா) - ஒரு கட்டு
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
வறுத்து திரித்த சீரகம் - ஒரு தேக்கரண்டி
வினிகர் - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

வால்நட்டை தோலுரித்து வைக்கவும்.
டேட்ஸை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து விதையை நீக்கவும்.
புதினாவை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவவும்.
முதலில் மிக்ஸியில் இஞ்சி, பொடித்த சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைக்கவும்.
அடுத்து டேட்ஸ், வால்நட், புதினா மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.
சுவையான வால்நட் டேட்ஸ் மிண்ட் சட்னி ரெடி.

வால்நட் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதன் வடிவமே மூளை வடிவத்தில் தான் இருக்கும். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தினம் கொடுத்து வரலாம். இந்த சட்னியை ப்ரெட்டில் ஜாம் போல வைத்து சாப்பிடலாம். டேட்ஸில் (பேரீட்சை) சில கூடுதலான இரும்பு சத்து உள்ளது. நோன்பு காலங்களில் பஜ்ஜி, போண்டா, வடைக்கு தொட்டுக்கொள்ள ஆரோக்கியமான சட்னி. சுவையான இனிப்பு, புளிப்பு, காரம், புதினா மணத்துடன் அருமையான சட்னி. கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சத்தான சட்னி இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Jaleela Madam, சட்னி நன்றாக உள்ளது. நீங்கள் உபயோகப்படுத்தியிருப்பது fresh dates ah?

God is good! All the time!

ஹாய் மேடம், உங்களுடைய சமையல் குறிப்பு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்;) அதே போல் இந்த சட்னி கூட சூப்பர் ஹெல்தி சட்னி ரொம்ப பிடிச்சி இருக்கு வாழ்த்துக்கள்.;)))

உன்னை போல பிறரையும் நேசி.

wallnut dateschutney is very nice. i will try your recipe.regards.g.gomathi.

டாப் ஒன்னு சமையலில் நீங்க எவ்ளோ சமையல்தான் செய்விங்க அனைத்து சமையலும் நினைவு இருக்குமா? சுவையான சட்னி வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

அன்பு லக்‌ஷ்மி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி எல்லாத்தையும் நினைவில் வைத்து கொள்வது சற்று சிரமம் தான், சிலது மறந்து போகும், சில நேரம் வேறு சில பொருட்களை சேர்த்து புது ரெசியாகிடும்.
இந்த துவையலே முன்று முறைகளில் செய்தாச்சு,
எல்லாமே சூப்பரா தான் வந்தது.
உங்கள் ஊக்கத்துக்கும் , கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Jaleelakamal

அன்பு கோமதி செய்து சாப்பிட்டு விட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்,
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleelakamal

அன்பு எம் தேவி, உங்கள் கருத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Jaleelakamal

நிலா உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி
பிரெஷ் டேட்ஸ் தான் ஆனால் டிரையானது.
எந்த வகையான பேரிட்சையிலும் செய்யலாம்.

Jaleelakamal

புதுவிதமான ருசியான சட்னியா இருக்கு வாழ்த்துக்கள் ஜலீலா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அக்கா இது கொஞ்சம் இனிப்பு சுவையோட இருக்கும் இல்லையா? நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள் அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

super recipe. thanks jaleelakka:)

KEEP SMILING ALWAYS :-)

ஜலீலா மேடம்,

வித்தியாசமான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பரான ஆரோக்கியமான குறிப்பு. இங்குள்ள பல வகையான உணவுகளுக்கு பக்க உணவாக இது நன்றாகவே ஒத்து போகும். அதுவும் இல்லாமல் குழந்தைகளுக்கு எட்டர நல்லதொரு குறிப்பு. எனக்கு சில சந்தேகம்......வால்நட்டை வறுத்து தோலுரிக்கனுமா இல்லை காயவைத்தாலே வந்து விடுமா? வினிகர் எதற்க்காக எங்கே சேர்க்கவேண்டும்? இதை செய்தால் ஜாம் மாதிரி அதிக நாள் வைத்திருக்க முடியுமா? சொன்னால் அதிகமாக செய்து வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஜலீலா அக்கா,
புதுவிதமான குறிப்பு.வித்தியாசமான காம்பினேஷன்ல கொடுத்து இருக்கீங்க.சூப்பரா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

அன்பு குமாரி

//புதுவிதமான ருசியான சட்னியா இருக்கு வாழ்த்துக்கள் ஜலீலா//
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

Jaleelakamal

வாஅலைக்கும் சலாம் ஆமீனா இதில் பேரிட்சை பழம் சேருவதால் இனிப்பாகவும் மற்ற பொருட்கள் புளிப்பு ,காரம் என ஒரு வித்தியாசமான ருசியில் இருக்கும்.

Jaleelakamal

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நாகா ராம்

Jaleelakamal

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிதா

Jaleelakamal

லாவன்யா

//வால்நட்டை வறுத்து தோலுரிக்கனுமா இல்லை காயவைத்தாலே வந்து விடுமா? //

பாதம் தோலை உறிப்பது போல் கொதி வெண்ணீரில் ஊறவைத்தால் தோலை ஈசியாக உறித்து விடலாம்.

//வினிகர் எதற்க்காக எங்கே சேர்க்கவேண்டும்? ..

வினிகர் ஊறுகாயிக்கு வினிகர் ஊற்றினால் கெட்டுபோகாமல் இருக்கும்.

இதே சட்னியில் வினிகருக்கு பதில் புளி சேர்த்தும் அரைத்து இருக்கேன்,

//இதை செய்தால் ஜாம் மாதிரி அதிக நாள் வைத்திருக்க முடியுமா?//

கைபடாமல், ஈரகரண்டி போடாமல் உபயோகித்தால் பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்து இருக்கலாம். நான் 3 அ 4 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன் படுத்தி இருக்கேன்.
இல்லை நிறைய அரைத்து பாதியை பிரீஜரில் போட்டு கொள்ளலாம்.
தேவைக்கு காலி யானதும் மீதியை பிரீஜரில் இருந்து எடுத்து பயன் படுத்தலாம்.

பிள்ளைகளுக்கு தோசை, இட்லி இடியாப்பம், பிரட் பன், ரொட்டி எல்லாத்திகும் தடவி கொடுக்கலாம்.

Jaleelakamal

ஹர்ஷா உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleelakamal

அன்பு ஜலீலா,

சூப்பராக இருக்கு, இந்தக் குறிப்பு.

உங்க குறிப்புகளில் நிறைய செய்து பார்த்து, பின்னூட்டமும் கொடுத்தேன். குபூஸ் ரொட்டி, பூண்டுப் பால், வெஜ் தாளிச்சா, எல்லாம் செய்தேன்.

சமீபத்தில் பச்சை வெஜ் குருமா செய்தேன், பிரமாதமாக இருந்தது. இன்னும் அந்தக் குறிப்பில் பின்னூட்டம் கொடுக்கலை, இப்ப கொடுத்து விடுகிறேன்.

நல்ல குறிப்புகளுக்கு நன்றி, ஜலீலா

அன்புடன்

சீதாலஷ்மி

வித்யாசமான சட்னி வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புதுவிதமான சட்னி வாழ்த்துக்கள் தோழி

வீட்டில் கிலோ கணக்கா வால்னட் இடுக்கு. செய்து பார்த்து சொல்கிறேன் ;)
நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//உங்க குறிப்புகளில் நிறைய செய்து பார்த்து, பின்னூட்டமும் கொடுத்தேன்.//
சீதாலக்‌ஷ்மி அக்கா நான் வந்து பார்க்கும் போது எதில் போய் தேடுவது

சமீபத்திய பதிவு இல்லாததால் யார் யார் பின்னூட்டம் போட்டங்கன்னு கண்டு பிடிக்க முடியல.

//குபூஸ் ரொட்டி, பூண்டுப் பால், வெஜ் தாளிச்சா, எல்லாம் செய்தேன்.

சமீபத்தில் பச்சை வெஜ் குருமா செய்தேன், பிரமாதமாக இருந்தது. இன்னும் அந்தக் குறிப்பில் பின்னூட்டம் கொடுக்கலை, இப்ப கொடுத்து விடுகிறேன்.//

செய்து பார்த்து விட்டு அபப்டியே போகாமல் இங்கு வந்து கருத்து தெரிவித்தது ரொம்ப சந்தோஷம். அக்கா

Jaleelakamal

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஸ்வர்னா

நன்றி தோழி ஹமீது பாத்திமா

ரம்யா கிலோ கணக்கில் வால்நட் இருக்கா அப்ப குருமாவுக்கு அரைத்து ஊற்றுங்கள்,

வால்நட்டுடன் கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து சாப்பிடலாம்

வால்நடை ரெய்தாவில் பச்சமிளகாய் பூண்டுடன் சேர்த்து கொரகொரபப திரித்து கலக்குங்கள் சூப்பராக இருக்கும்.

Jaleelakamal

நீங்களே தானா..நல்லதொரு குறிப்பு..நீண்ட இடைவெளிக்கு பிறகு வரீங்கன்னு நினைக்க்கிறேன்.உருளை குழங்கு போண்டாவுக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி ஜலீலக்கா

வாங்க வாங்க நல்ல குறிப்பு தான் போண்டா மட்டும் இல்ல பஜ்ஜி வடை அனைத்துக்கும் பொருந்தும்.

Jaleelakamal

அக்கா,ஹெல்த்தியான நல்ல்தொரு குறிப்பு.சந்தேகமே இல்லை ,குழந்தைகள் விரும்புவாங்க.

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ராஹி..
மீண்டும் இங்க உஙக்ள் பார்ப்பது சந்தோஷ்ம், இதே மர்லியும் , தளியும் வந்தால் ஆஹா, நம்ம பாடு படு ஜாலி தான்..

Jaleelakamal

ஜலீலாக்கா. நான் உங்களோட ரொம்ப பெரிய ஃபேன்.உங்க குறிப்புகளை பார்த்து தான் நான் ஓரளவு சமைக்க கற்றுக்கொண்டேன். தாங்க்ஸ் அக்கா.

நசீம் ரொம்ப சந்தோஷம்,இங்கு என் சமையல் மூலம் பல பேர் பயனடைந்து இருக்காங்க,
யாரும் ஞாபகம் வைத்து கொள்ளவ்தில்லை

செய்து பார்ப்பவர்கள் ஒரு பின்னூட்டம் மூல்மாவது அவரவர் நன்றியை தெரிவிக்கலாம்.

Jaleelakamal

அக்கா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா.உங்க கூட பேசுனதே எனக்கு அவ்ளோ சந்தோஷம். நான் ஒரு 5 மாசமா தான் அருசுவையில் இருக்கேன். இதில் உள்ள ரெசிபீஸ் லாம் செஞ்சா என் மச்சானுக்கு ரொம்ப புடிச்சி பாராட்டுவாங்க.உங்க பிரியாணி பாத்து தான் தான் நான் பிரியானி செய்யவே கத்துக்கிட்டேஎன்.தங்க்ஸ்கா மறுபடியும்.பேசினதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.very very thanks akka

valnat and akrut 2 dum orey peyarthana..

அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]சகோதரி ஜலீலா பானு.1.வெனிகர் ஊத்தாமல் செய்யலாமா.2.எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம்.3.பிரிட்ஜில் வைக்கலாமா. வஸ்ஸலாம் அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீது

அறுசுவை தேன் சுவை

Assalam alikum jaleela madam neega enga erikirai ungda recipe partuthan naan cook panurai thanks