உப்பு உருண்டை

தேதி: August 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

இட்லி அரிசி - ஒரு கப்
கடலைபருப்பு, உளுந்து - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடுக, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - சிறிது


 

உப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
இட்லி அரிசியை கழுவி 5 மணி நேரம் ஊற வைத்து ரவை பதத்தில் நன்கு அரைக்கவும். அரைத்த நீரை வீணாக்காமல் எடுத்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
பின்பு கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மாவை நன்கு நீர்க்க கரைத்து, அடுப்பை குறைத்து, வதக்கிய கலவையுடன் மாவை ஊற்றவும்
நன்கு கெட்டியாக கட்டி இல்லாமல் மாவு வெந்து வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
மாவுடன் தேங்காய் துருவலை நன்கு கிளறி விட்டு கை பொறுக்கும் சூட்டில் உருண்டை செய்து இட்லி பானையில் வைத்து அவித்து எடுக்கவும்.
சுவையான உப்பு உருண்டை தயார்.

இதே முறையில் தாளிதம் இல்லாமல் வெல்லம், ஏலம் சேர்த்து கொதிக்கவைத்து மாவுடன் கலந்து செய்தால் இனிப்பு உருண்டை கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உப்பு உருண்டை பார்க்கவே சாப்டனும் போல உள்ளது.

இதில் இனிப்பு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பார்கிறேன் ,வாழ்த்துக்கள் கவி.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

கவிதா,
உப்பு உருண்டை சின்ன வயசுல சாப்பிட்டது.நியாபகப் படுத்திட்டீங்க.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

கவி உப்பு உருண்டை சூப்பரா இருக்குங்க. நாங்க நீர் உருண்டைன்னு சொல்லுவோம் நானும் இதே முறையில் தான் செய்வேன் ஆனால் நீரில் கரைத்து கிளர மாட்டேன் அப்படியே மாவை கெட்டியாக அரைத்து தாளிப்பில் சேர்ப்பேன்.

வாழ்த்துக்கள்:) எனக்கும்,என்னவ்ருக்கும் ரொம்ப பிடிக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு கவிதா,

புழுங்கலரிசியை அரைத்து செய்யும் இந்த முறை, எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஜீரணத்துக்கு எளிதான முறையாக இருக்கு.

கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கவி ஈசியான குறிப்பு வாழ்த்துக்கள்

இதை போல தான் நானும் செய்வேன்..
என்றாலும் அம்மா கைமனம் போல வராது. நியாபகபடுத்திவிட்டீர்கள் ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும் குழுவினர்க்கும் நன்றி

குமாரி,
செய்துவிட்டு சொல்லுங்க
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

அன்பரசி,
எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஸ்வர்ணா,
உங்க குறிப்பையும் எதிர்பார்க்கிறேன்
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

சீதா அம்மா,
சரியாக சொன்னீங்க
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

பாத்திமா அம்மா,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ரம்யா,
அம்மா இதை ரொம்ப நல்ல செய்வாங்க..ம்ம்ம் என்ன செய்ய?
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இதை நாங்களும் நீர் உருண்டை என்று தான் சொல்லுவோம். என் பாட்டி வீட்டு ஸ்பெஷல். பள்ளியில் படிக்கும் போது லீவுக்கு ஊருக்கு போனால் பாட்டி செய்துக் கொடுப்பாங்க :(

வாழ்த்துக்கள் !!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு மிகவும் பிடித்த உருண்டை இது... எங்க வீட்டிலும் இதே போல் தான் செய்வோம்... :) என் குறிப்பும் ஏற்கனவே அறுசுவையில் வந்திருக்கு. நல்லா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் உப்பு உருண்டை செய்தது இல்லை... ஆனால் சாப்பிட்டு இருக்கேன்... எனக்கும் ரொம்ப பிடிக்கும்...
எனக்கு என்ன சந்தேகம்ன
என்கிட்டே அரிசி மாவு இருக்கு அது கொஞ்சம் கொர கொரப்ப இருக்கும். அதை வைத்து உப்பு உருண்டை செய்யலாமா

நீங்க வைச்சு இருக்கற அரிசிமாவுலையும் செய்யலாம். உப்பு உருண்டைக்கு அரிசிய கொரகொரப்பா அரைச்சும் செய்வாங்க.

நன்றி Vinoja17