சிக்கன் பிரியாணி சமையல் குறிப்பு - 19978 | அறுசுவை


சிக்கன் பிரியாணி

food image
வழங்கியவர் : amina mohammed
தேதி : செவ்வாய், 16/08/2011 - 20:04
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

  • பாஸ்மதி அரிசி- 2 டம்ளர்
  • வெங்காயம்-3
  • தக்காளி-5
  • கொத்தமல்லி- அரை கப்
  • புதினா -அரை கப்
  • இஞ்சி பூண்டு விழுது-3 ஸ்பூன்
  • பட்டை-1
  • ஏலக்காய்-3
  • கிராம்பு-3
  • அன்னாசி பூ-1
  • பிரிஞ்சி இலை-1
  • கலர் பொடி- சிறிதளவு
  • நெய்-2 மேசைகரண்டி
  • சிக்கனில் சேர்க்க
  • சிக்கன்- அரைகிலோ
  • பச்சை மிளகாய்- 4 (காம்பு மட்டும் நீக்கியது)
  • ஜாதிக்காய் பவுடர்- கால் ஸ்பூன்
  • மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
  • பிரியாணி மசாலா தூள்- 2 ஸ்பூன்
  • தயிர்- ஒரு கப்
  • எலுமிச்சை சாறு- ஒரு குழிகரண்டி
  • கொத்தமல்லி- அரை கப்
  • புதினா -அரை கப்
  • இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு

 

  • பாஸ்மதியை தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து அரைவேக்காட்டுக்கு உதிரியாக வேக வைத்து வைக்கவும்.
  • சிக்கனில் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களுடன் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்
  • கடாயில் நெய்விட்டு வாசனைபொருட்களை தாளிக்கவும்
  • பின் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  • இப்போது ஊற வைத்த சிக்கன் மற்றும் தக்காளி சேர்த்து நீர்விடாமல் சிறுதீயில் வேகவிடவும் (கிரேவி பதத்தில் இருக்க வேண்டும்)
  • சிக்கன் க்ரேவி தயாரானதும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு சாதம், சிறிதளவு கொத்தமல்லி புதினா, சிறிதளவு கிரேவி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
  • மேலே சாதம் வரும் அளவுக்கு அரேஞ்ச் செய்யவும்.
  • பின் கலர்பொடியை நீரில் கரைத்து சுற்றி வட்ட வடிவில் ஊற்றவும்
  • இதனை 5 நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை தம்மில் வைத்து பின் கரண்டி உபயோகப்படுத்தாமல் குலுக்கி விட்டு பரிமாறவும்.
புதினா கொத்தமல்லி காம்புடன் சேர்க்கவும். தக்காளியை நான்காக வெட்டினால் போதுமானது. எலுமிச்சை சாற்றை பிழியும் போது கசக்கி பிழியாமல் மேலாக மட்டும் பிழியவும்.