கொறடா

தேதி: August 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வற்றல் மிளகாய்/பச்சை மிளகாய் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு
எண்ணெய், கடுகு, உளுந்து - தாளிக்க


 

வற்றல் மிளகாயை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும் (பச்சை மிளகாயை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி கொள்ளவும்).
அதனுடன் புளி, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் கடுகு, உளுந்து தாளித்து அரைத்த விழுதை கொட்டி சுருள வரும் வரை கிளறவும்.


இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

காரசட்னியா?

சுலபமா இருக்கு .... செய்து பாக்குறேன்

வாழ்த்துக்கள் நாகா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கருத்துக்கு நன்றி ஆமினா.. செய்து பார்த்துட்டு சொல்லுங்க :-)

KEEP SMILING ALWAYS :-)

புளி என்றால் அது என்ன அளவு? அளவு சொன்னால் செய்து பார்க்க எதுவாக இருக்கும். இது எந்த ஊர் குறிப்பு? ஏனென்றால் எங்கள் பக்கத்தில் புளிச்சட்னி/காரச்சட்னி என்று இதை சொல்லுவார்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பதிவிற்கு நன்றி லாவண்யா :-)
சிறு நெல்லிக்காய் அளவு புளி இருந்தால் போதும்.

KEEP SMILING ALWAYS :-)

மன்னிக்கவும்......இரண்டு முறை பதிவாகி விட்டது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!