பப்புச்சாறு சமையல் குறிப்பு - படங்களுடன் - 19987 | அறுசுவை


பப்புச்சாறு

வழங்கியவர் : amina mohammed
தேதி : புதன், 17/08/2011 - 13:36
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.5
6 votes
Your rating: None

 

  • விதை நீக்கிய புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  • துவரம்பருப்பு - 25 கிராம்
  • தக்காளி - 4
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • தாளிக்க:
  • கடுகு
  • சீரகம்
  • உளுந்து
  • கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
  • தட்டிய பூண்டு - 10 பல்
  • வெங்காயம் - 2
  • வர மிளகாய் - 5

 

புளியை அரை மணி நேரத்துக்கு முன்பே ஊற வைக்கவும். அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு கரைக்கவும் (புளியுடனேயே). குக்கரில் அலசிய பருப்பு சேர்த்து தண்ணீருக்கு பதிலாக தக்காளி, புளி கரைசலை சேர்த்து வேக விடவும் (பருப்பு பாதி வெந்தால் போதுமானது)

தனியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், வரமிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

அத்துடன் தூள் வகைகளும், உப்பும் சேர்த்து கிளறவும்.

எண்ணெய் பிரிந்து தனியே வந்ததும் பருப்பு நீரை சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

சுவையான பப்புச்சாறு தயார்.

பொதுவாக ஆந்திரா சமையல்களில் புளியை (நம்மை போல் புளி கரைத்து அதன் நீரை மட்டும் எடுப்பது போல் அல்லாமல்) அப்படியே உபயோகிப்பார்கள். அவ்வாறு சேர்ப்பது தான் இந்த ரசத்துக்கு அருமையாக இருக்கும். அதனால் புளியை ஊற வைக்கும் முன்பே விதை மற்றும் மேலுள்ள ஓடுகளை நீக்கி உபயோகிக்கவும். தக்காளி கையால் கரைக்கும் போது முடிந்த வரை தக்காளி தோல்களை எடுத்து விடலாம். சேர்த்தாலும் ஒன்றுமில்லை.




இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..



அமீனா அக்கா

அமீனா அக்கா ரொம்ப நல்ல சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள் by Elaya.G

பப்புச் சாறு

அன்பு ஆமினா,

சுலபமான, சுவையான குறிப்பு.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ஆமினா

ஆமினா சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி

குறிப்பை வெளீயிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Elaya.G

மிக்க நன்றி இளயா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுவர்ணா

மிக்க நன்றி சுவர்ணா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சீதாம்மா

ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி சீதாம்மா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி

சலாம் ஆமிம்மா சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்

super rasam

super rasam

I LOVE MY FAMILY

பாத்திமாம்மா

வ அலைக்கும் சலாம் வரஹ்

மிக்க நன்றி பாத்திமாம்மா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா