காலிஃப்ளவர் குருமா

தேதி: June 17, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

காலிஃப்ளவர் - ஒன்று
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - 2 மேசைக்கரண்டி
தக்காளி - 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
அரைத்துக் கொள்ளவும்:
துருவிய தேங்காய் - ஒரு கப்
முந்திரி - 10
கசகசா - ஒரு தேக்கரண்டி


 

காலி ஃப்ளவரை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிதளவு சோம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த விழுது, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பின் மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், உப்பு, வேகவைத்த காலி ஃப்ளவர் போட்டு கிளறி கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
கொத்தமல்லி இலை, சிறிது நெய் விட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று உங்களுடைய காலிஃபிளவர் குருமா செய்தேன்.மிகவும் சுவையாக நன்றாக இருந்தது.சப்பாத்திக்கு செய்தேன்.தோசைக்கும் நன்றாக இருந்தது.காரம் தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது. சிறிது தேங்காய்,முந்திரி அரைத்து சேர்த்தேன்.சரியாகிவிட்டது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.