ரஸ்க் அல்வா

தேதி: August 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

ரஸ்க் - 10
சீனி - ஒரு கப்
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 4 -5
கிஸ்மிஸ்/பாதாம் - 4 – 5


 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
ரஸ்க் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றவும். நெய் காய்ந்ததும் ரஸ்க் தூளை அதில் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு கிளறவும்.
பொடித்த ரஸ்க் தூளின் அளவில் பாதியளவு சீனியை எடுத்து, அடுப்பில் இருக்கும் கலவையில் சேர்க்கவும்.
அதில் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும். (இனிப்பு அதிகம் வேண்டுமென்றால், சீனியின் அளவை சிறிது அதிகமாக்கலாம்)
வெந்த அல்வாவை, நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி வறுத்த முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும். ஐந்தே நிமிடங்களில், சுவையான ரஸ்க் அல்வா தயார். ரஸ்க் தூளுக்குப் பதிலாக, பன் அல்லது ரொட்டி சேர்த்தும் செய்யலாம். பன்/ரொட்டி/ரஸ்க் ஏற்கனவே இனிப்பானது, சமைக்கப்பட்டது என்பதால், சீக்கிரம் வெந்து விடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சீதாம்மா ஊர்ல இருந்து வந்தச்சா. கேரமல் கலருல சூப்பரா இருக்கு அல்வா ஈஸியா செய்முறை. வாழ்த்துக்கள்.

ஆஹா இவ்வளவு ஈஸியா ஒரு ஸ்வீட்டா. சீதாம்மா ரொம்ப சூப்பர்மா. எங்க இருக்கீங்க? ஊரிலிருந்து வந்துட்டீங்களா? வீட்டில் அனைவரும் நலமா?

ரஸ்க் அல்வா புதுமையா இருக்கு செய்து பார்கிறேன் சீதா மேடம்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சீதாம்மா ரஸ்க் அல்வா சூப்பர்மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல எளிமையான வித்தியாசமான குறிப்பு.
அவசியம் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாலக்ஷ்மி அம்மா,
ரஸ்க் அல்வா இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.புதுமையான குறிப்பு.நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய அல்வா.விரைவில் செய்துட்டு பதிவு போடுறேன்.வாழ்த்துக்கள்.

சீதாமேடம்

ரொம்ப ஈசியான குறிப்பு. வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சமீபத்தில் யாரோ மன்றத்தில் இதை கேட்டாங்க... நானும் குறிப்பு கொடுக்கலாம்னு நினைச்சேன்... நேரம் இல்லை. அருமையா செய்து காட்டி இருக்கீங்க... உடனே செய்துடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரஸ்க் ல அல்வாவாவாவா. சூப்பர், கலக்கீடீங்கம்மா. ஊருல இருந்து வந்துடீங்களா? பேரன், பேத்தி நலமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு ஆமினா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஆமினா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அட...அங்கே இருக்கும் போது பேகிங்.....இங்கே வந்ததும் நம்மூர் குறிப்பு.

கலக்குங்க. அல்வா சூப்பரா இருக்கு......வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சீதா அம்மா,
எளிமையான அல்வா..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின், குழுவினருக்கு நன்றி.

இந்தக் குறிப்பினை செய்தவர் என் இளைய மருமகள் மகேஸ்வரி.

அன்பு வினோஜா,

ஊரிலிருந்து வந்தாச்சு. அறுசுவைக்கு வருவதற்குதான் கொஞ்சம் தாமதமாகி விட்டது. ஈஸியான குறிப்புதான். ஐந்தே நிமிடத்தில் செய்துடலாம்.

அன்பு யாழினி,

பாராட்டுக்கு நன்றி. ஊரிலிருந்து வந்து ஒரு மாதமாகி விட்டது. வீட்டில் அனைவரும் நலமே.

அன்பு குமாரி,

ரொம்ப சுலபமாக செய்து விடலாம். அவசியம் செய்து பாருங்க.

அன்பு சுவர்ணா,

பாராட்டுக்கு மிகவும் நன்றி. டேஸ்டும் வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது.

அன்பு ரம்யா,

எளிமையாகவும், சீக்கிரமாகவும் செய்து விடலாம். செய்து பாருங்கள்.

அன்பு அன்பரசி,

நெய் கொஞ்சம் கூட சேர்த்தால், கிட்டத்தட்ட கோதுமை அல்வா மாதிரி இருக்கும். செய்து பாருங்கள்.

அன்பு மஞ்சுளா,

ரொம்பவும் ஈசியாக இருந்தது. பாகு பக்குவம் எல்லாம் வேண்டாம். செய்து பாருங்கள்.

அன்பு வனிதா,

ஆமாம், யார் கேட்டிருந்தாங்க என்று எனக்கும் நினைவில்லை. மதுரைப் பக்கம் கல்யாண வீடுகளில் பன் அல்வா ரொம்ப ஃபேமஸ். ரஸ்க் சேர்ப்பதற்கு பதிலாக பன் சேர்த்தும் செய்யலாம். செய்து பாருங்க.

அன்பு சுகந்தி,

ஊரிலிருந்து வந்தாச்சு. இப்பதான் கொஞ்சம் டைம் கிடைச்சுது குறிப்புகள் அனுப்பறதுக்கு. பேரன், பேத்தி அனைவரும் நலமே.

அன்பு லாவண்யா,

ஆமாம், ஆசை தீர, கேக் போன்ற குறிப்புகள் செய்தாச்சு. இனி, இங்கே உள்ள குறிப்புகள்தான் அனுப்பணும்.

அன்பு கவிதா,

ரொம்பவும் சுலபமாக, ஐந்தே நிமிடங்களில் செய்து விடலாம். பாராட்டுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா வித்தியாசமான குறிப்பு சீக்கிரம் செய்துட்டு சொல்கிறேன் வாழ்த்துக்கள்

நிமிடத்தில் ஸ்வீட் செய்துடாலாம் போல இருக்கே.

இதே போல் பிரட் கிரம்ஸிலும் செய்யலாம் இல்லையா.

சீதாலக்‌ஷ்மி அக்கா என் குறிப்புகள் நிறைய செய்து இருக்கீங்க ஆனால் எப்ப எங்கு வ்ந்து பார்ப்பது

முன்பு இருந்த சமீபத்திய பதிவு என்று ஒன்று இருக்கும் அது இப்ப இல்லை

எத்தனை மாதம் கழித்து வந்து பார்த்தாலும் அறுசுவையில் எனக்கு யார் என் பதிவுகளுக்கு பதில் போட்டு இருககங்கன்னு பார்த்து பதில் போடுவேன்,

இப்ப அது இல்லை ஆகையால் ஒன்றும் தெரியமாட்டுங்கிறது.

Jaleelakamal

அன்பு ஃபாத்திமா,

சுலபமாகவும், சீக்கிரமாகவும் செய்துடலாம். செய்து பாருங்கள்.

அன்பு ஜலீலா,

ஐந்தே நிமிடத்தில் செய்து விடலாம். பிரட் கிரம்ஸிலும் செய்யலாம்.

மதுரையில் கல்யாண வீடுகளில் இப்போதெல்லாம் பன் அல்வாதான் ஃபேமஸ்.

நிறைய குறிப்புகள் மட்டுமல்ல, அடிக்கடியும் உங்க குறிப்புகள் செய்துகிட்டிருக்கேன்:) இப்ப போன வாரம் கூட, பஹாரா கானா செய்தோம். அதோட அப்ஸராவின் ஈஸி பரோட்டாவும், ஆசியாவின் எம்டி சால்னாவும் செய்திருந்தோம். காம்பினேஷன் சூப்பராக இருந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி